»   »  விஷால் 'ரெட்டி'.... - இது ராதிகாவின் உள்குத்து!

விஷால் 'ரெட்டி'.... - இது ராதிகாவின் உள்குத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஷாலை அவரது சாதியைக் குறிக்கும் வகையில் விஷால் 'ரெட்டி' என்று குறிப்பிட்டுப் பேசினார் நடிகை ராதிகா.

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியும் விஷால் அணியும் கட்டிப் பிடித்து உருளாத குறையாக அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதுவரை இரு தரப்பிலும் சற்று டீசன்டாகத்தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். போகப் போக அசிங்க வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டாலும் வியப்பதற்கில்லை என்ற நினைப்பைத் தோற்றுவித்தது நேற்றைய பிரஸ் மீட்.

Why Radhika mentioned Vishal as Reddy?

நேற்று நமக்கு பேட்டியளித்த ராதாரவி, விஷால் அணி சாதி அரசியலை நடிகர் சங்கத்தில் புகுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவரது அணியின் முக்கியப் பிரமுகரான ராதிகாவோ, எதிரணி விஷாலைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது சாதிப் பெயரான 'ரெட்டியை' உடன் சேர்த்துக் கொண்டார். இது வந்திருந்த அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

விஷாலின் அப்பா ஜிகே ரெட்டியைத் தெரியாதவர்கள் திரையுலகில் இல்லை. ராதிகாவின் கணவரான சரத்குமாரை வைத்து மகா பிரபு, ஐ லவ் இந்தியா என இரண்டு படங்கள் தயாரித்தவர் ஜிகே ரெட்டி. ஆனால் விஷால் எந்த இடத்திலும் தன்னை விஷால் ரெட்டி என்று அழைத்துக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஆனால் எதற்காக வார்த்தைக்கு வார்த்தை விஷாலை ரெட்டி என்று அழைத்தார் ராதிகா? ரெட்டி இனத்தவர்கள் ஒன்றாக இணைந்தா எதிர்த்தரப்பில் நிற்கிறார்கள்? ஒரு மூத்த நடிகையான ராதிகாவே இப்படி சாதியத்தைக் கையிலெடுக்கலாமா?' என்பதே அவர் பேச்சைக் கேட்டவர்களின் கமெண்டுகளாக இருந்தது.

English summary
Actress Radhika, one of the key persons in Sarathkumar team has mentioned Vishal's name with the suffix 'Reddy'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil