»   »  ஆமிர்கானின் டங்கலுக்கு வாய்ஸ் தர மறுத்த ரஜினிகாந்த்!

ஆமிர்கானின் டங்கலுக்கு வாய்ஸ் தர மறுத்த ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக தனது படங்கள் பிற மொழியில் டப் செய்யப்பட்டால், தனது பாத்திரத்துக்கு டப்பிங் பேச மாட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருக்கிறார். இது தெரியாமல் ரஜினியிடம் ஒரு கோரிக்கை வைத்துவிட்டார் ஆமீர்தான்.

அமிர்கான் நடித்துள்ள டங்கல் படம் டிசம்பர் 23 அன்று வெளிவருகிறது. இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் தனது கேரக்டருக்கு ரஜினி டப்பிங் கொடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ஆமிர். ஆனால் ஆமிரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ரஜினி.

Why Rajinikanth refuses for Aamir Khan?

ஏன் தெரியுமா?

ஆமிர் சொல்லும் பதில் இது...

"இந்தப் படம் தமிழ், தெலுங்கில் டப் ஆகியுள்ளது. தமிழில் எனக்கு ரஜினி டப்பிங் செய்யவேண்டும் என்று அவரிடம் பேசினேன். அவரும் படம் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் இருவரும் விவாதித்த பிறகு ஒன்று புரிந்தது. அவருடைய குரல் அனைத்து மொழியினருக்கும் பரிச்சயமானது. என் முகத்துக்கு அவர் குரல் சரியாக இருக்காது. எனவே அவர் டப்பிங் செய்வது சரியல்ல என்ற அவரது முடிவை ஏற்றுக் கொண்டோம்," என்றார்.

English summary
Why Superstar Rajinikanth has refused Aamir Khan's request to dub for his Dangal movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil