»   »  வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்!

வேட்டி விளம்பரத்தில் நடிக்காதது ஏன்? ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்க வைத்த ராஜ்கிரண் பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் வர்த்தகமயமான சினிமா உலகில் வாழ்ந்தாலும், தனக்கென சில கொள்கைகளை விடாப்பிடியாக வைத்திருக்கும் அபூர்வ மனிதர்களும் அதே சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வர்த்தக விளம்பரங்களில் என்றல்ல, எந்த விளம்பரத்திலுமே தோன்றுவதில்லை என்ற கொள்கையில் பல ஆண்டுகள் உறுதியாக நிற்பவர் ரஜினி.

அடுத்து ராஜ்கிரண். இவர் ஒரேயடியாக விளம்பரங்களில் நடிக்க மறுப்பதில்லை. அது நல்லதா, சமூகத்தை பாதிக்கிறதா என்பதைப் பார்த்தே எதையும் ஒப்புக் கொள்கிறார்.

Why Rajkiran denies to appear in Dothi ad?

சமீபத்தில் அப்படி வந்த ஒரு பெரிய வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார்.

இதுபற்றி விகடனில் வெளியாகியுள்ள அவரது பேட்டியின் ஒரு பகுதி:

''விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?''

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்'னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க'ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?'னு கேட்டாங்க.

'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்'னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

English summary
Actor Rajkiran has recently denied to act in a dothi ad, even the company forwarded to give a big amount.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil