Don't Miss!
- News
2022ம் ஆண்டில் பதிவான அதிக அளவிலான மரண தண்டனை.. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு! ஷாக் ரிப்போர்ட்
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு இசை வெளியீட்டிலும் காணோம்.. வளைகாப்பு நிகழ்ச்சியிலும் காணோம்.. எங்கே போனார் சங்கீதா விஜய்?
சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு ஏன் வரவில்லை என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது. மேலும், முன்னதாக நடைபெற்ற இயக்குநர் அட்லியின் வளைகாப்பு விழாவில் கூட சங்கீதா விஜய் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வாரிசு படத்தின் ரிலீஸை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அம்மா, அப்பா கூட கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால், அவரது மனைவி சங்கீதா விஜய் மட்டும் கலந்து கொள்ளவில்லையே ஏன் என்கிற கேள்விக்கு தற்போது விளக்கம் கிடைத்துள்ளது.
யப்பா..
இது
பீஸ்ட்
படம்ப்பா..
அஜித்தின்
துணிவு
டிரைலரை
துவைத்து
எடுக்கும்
விஜய்
ரசிகர்கள்!

விஜய்யின் ரசிகை
நெஞ்சில் குடியிருக்கும் என நடிகர் விஜய் தனது ரசிகர்களை பார்த்து ஒன்றும் சும்மா சொல்லவில்லை. உண்மையாகவே ரசிகர்கள் மீதும் ரசிகைகள் மீதும் அவர் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அதற்கு உதாரணமாக தனது ரசிகையான சங்கீதா விஜய்யையே அவர் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யின் வெற்றிக்கு பக்க பலமாக இத்தனை ஆண்டுகள் இருந்து வருகிறார் சங்கீதா விஜய்.

ஆடியோ லாஞ்சுக்கு வரல
நடிகர் விஜய்யின் சினிமா விழாக்களுக்கு முதல் ஆளாக வந்து ஆஜர் ஆகிவிடுவார் அவரது மனைவி சங்கீதா விஜய். ஆனால், இந்த முறை வாரிசு இசை வெளியிட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. நடிகர் விஜய்யின் மனைவி ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை என்கிற கேள்வி கோடம்பாக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் பூதாகரமாக எழுந்துள்ளது.

வளைகாப்பு விழா
இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா அட்லியின் வளைகாப்பு விழாவில் கூட சங்கீதா விஜய் பங்கேற்கவில்லை. நடிகர் விஜய் மட்டுமே தனியாக சென்று போட்டோ ஒன்றை பரிசாக வழங்கி விட்டு வந்தார். தொடர்ந்து நடிகர் விஜய் உடன் பொது இடங்களில் சங்கீதா விஜய்யை பார்க்க முடியவில்லையே என்பது சர்ச்சையை கிளப்பியது.

குழந்தைகளுடன் உள்ளார்
நியூ இயர் கொண்டாட்டத்தை முன்னிட்டு லண்டனில் தனது குழந்தைகளுடன் புத்தாண்டை சங்கீதா விஜய் கொண்டாடினார் என்றும் வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்ததும் நடிகர் விஜய்யும் லண்டன் சென்று குடும்பத்தினருடன் நியூ இயர் கொண்டாடினார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் குழந்தைகளும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதா இருந்திருந்தால்
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் இருந்திருந்தால் வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் விஜய்யின் சிகை அலங்காரம், உடைகளை எல்லாம் கவனித்து அனுப்பி வைத்திருப்பார் என்றும் தேவையில்லாத சர்ச்சைகள், பேச்சுக்கள் எல்லாம் கிளம்பி இருக்காது என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வாரிசு ட்ரெய்லர்
நடிகர் விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் புத்தாண்டுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட பணிகள் இன்னமும் முடியவில்லையாம். ஜனவரி 4ம் தேதி வாரிசு ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தில் ராஜு அது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.