»   »  அப்ப நடிச்சாங்களா, இப்ப மட்டும் நான் ஏன் கான்களுடன் நடிக்கணும்?: கங்கனா

அப்ப நடிச்சாங்களா, இப்ப மட்டும் நான் ஏன் கான்களுடன் நடிக்கணும்?: கங்கனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நான் ஏன் கான்களுடன் நடிக்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கானுடன் நடிக்க அனைத்து நடிகைகளும் விரும்புவார்கள். இதற்கு கங்கனா ரனாவத் விதிவிலக்கு. பி கிரேட் படங்களில் நடித்து வந்த கங்கனா தற்போது பாலிவுட்டின் ராணியாக உள்ளார்.

இந்நிலையில் அவர் கான்கள் பற்றி கூறுகையில்,

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

நானும் பிற நடிகைகள் போன்று பாலிவுட்டின் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது கான்களின் படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது.

கான்கள்

கான்கள்

தற்போது படப்பிடிப்புகளில் நான் தான் ஹீரோ. அப்படி இருக்கையில் நான் ஏன் பிற ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும்? என் ஆரம்ப காலத்தில் கான்களுக்கு என்னுடன் நடிக்க விருப்பம் இல்லை. தற்போது நான் எதற்காக கான்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

க்வீன்

க்வீன்

க்வீன் இந்தி படம் கங்கனா ரனாவத்துக்காக மட்டுமே ஓடியது. படத்தின் ஹீரோ அவர் தான். க்வீன் சூப்பட் டூப்பர் ஹிட்டானதையடுத்து அவர் பாலிவுட்டின் ராணியாகிவிட்டார். அவருக்கு வாய்ப்புகளும் வந்து குவிகிறது.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

கங்கனாவுக்கும், அவரது முன்னாள் காதலரும், நடிகருமான ரித்திக் ரோஷனுக்கும் இடையே தற்போது நடந்து வரும் சண்டையை தான் பாலிவுட் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காதல் கசந்து அவர்கள் எதிரிகளாகிவிட்டதாக கூறப்படுகிறது.

English summary
Kangana Ranaut said that she doesn't want to act with Khans as they didn't want to act with her during her struggling.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil