»   »  நீங்க கபாலியை பார்க்கணும் பாஸு.. ஏன் தெரியுமா?

நீங்க கபாலியை பார்க்கணும் பாஸு.. ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி படம் பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க காரணங்கள் உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான கபாலி படம் முதல் நாள் மட்டும் அதுவும் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் படம் மொக்கைடா, வெறுப்புடா, முடியலைடா என விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தவர்கள் படம் நல்லாத் தானே இருக்கு ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என கேட்கின்றனர். விமர்சனங்களை தாண்டி கபாலியை பார்க்க காரணங்கள் உள்ளது.

ரஜினி

ரஜினி

ரஜினி படம் என்ற ஒரு காரணம் போதாதா கபாலியை பார்க்க. ரஜினி இளைஞராகவும் சரி, டானாகவும் சரி தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இந்த வயதிலும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று ரசிகர்களை வியக்க வைக்கிறார்.

டிரெய்லர்

டிரெய்லர்

கபாலி படத்தின் டிரெய்லரே யூடியூப்பில் சாதனை படைத்தது. உலகம் முழுவதும் தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா, கபாலிடா என்று கூறி வருகிறார்கள். டிரெய்லரே அதிர்ந்ததே படத்தில் அப்படி என்ன தான் இருக்கும் என்ற ஆர்வம் போதாதா?

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

படத்தில் ராதிகா ஆப்தே சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். குமதவள்ளி குமுதவள்ளி என ரசிகர்கள் அவரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தன்ஷிகாவும் தனது பங்கிற்கு நடிப்பில் அசத்தியுள்ளார்.

இசை

இசை

படத்திற்கு இசையும் ஒரு பலம் என்று கூறுகிறார்கள். நெருப்புடா, நெருங்குடா முடியுமா என்று பலரும் பாட பிற பாடல்களும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

தலைவர்டா

தலைவர்டா

ஒரு படத்திற்காக ஏகப்பட்டோர் அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லாமல் தியேட்டர்களுக்கு சென்றுள்ளனர். சில நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்தன. இதை எல்லாம் பார்க்கும்போது கபாலியில் அப்படி என்ன உள்ளது என பார்த்துவிடுவோம் என்ற நினைப்பு ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கின்றது.

எவன் பார்த்த வேலைடா?

எவன் பார்த்த வேலைடா?

ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களும் படத்தை பார்த்துவிட்டு நல்லா தானே இருக்கு பிறகு ஏன் படத்தை பற்றி தவறாக விமர்சனம் வந்துள்ளது. எவன் பார்த்த வேலைடா என்று கேட்கிறார்கள்.

English summary
There are reasons why you should watch Kabali inspite of some negative comments and reviews on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil