»   »  சங்கமித்திராவிலிருந்து விலகியது இதுக்காகத்தான்! - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்

சங்கமித்திராவிலிருந்து விலகியது இதுக்காகத்தான்! - ஸ்ருதி ஹாஸன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாஸன் விலகிவிட்டார் என்ற செய்தி வெளியானதும் கோலிவுட்டில் சின்ன பரபரப்பு. காரணம் ரூ 250 கோடி பட்ஜெட் படம். பிரமாண்ட திட்டமிடல். எப்படி இவ்வளவு பெரிய வாய்ப்பை ஸ்ருதி ஹாஸன் இழக்கிறார்? என்றெல்லாம் கேள்விகள்.

இதற்கான விளக்கத்தை இன்று ஸ்ருதி ஹாஸன் வெளியிட்டுள்ளார்.

Why Shruthi Hassan walks out from Sangamithra?

அதில், "சங்கமித்ரா மாதிரி ஒரு பெரிய புராஜெக்டை இழப்பது கஷ்டமாகத்தான் உள்ளது. இதற்காக தனி ட்ரெய்னர் வைத்து வாள் சண்டையெல்லாம் கற்றேன். ஆனால் இப்போது வரை எனக்கு படத்தின் முழு திரைக்கதையைத் (Bounded Script) தரவே இல்லை. 2 ஆண்டுகள் இந்தப் படத்துக்காக நான் ஒதுக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் எனக்கு முழுமையாகக் கதை தெரிந்திருக்க வேண்டுமல்லவா... மேலும் எனது புதிய இந்திப் படத்தின் புரமோஷனல் வேலைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். அதனால்தான் என்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது," என்று கூறியுள்ளார்.

எத்தனை ஹிட்கள் கொடுத்தவர் சுந்தர் சி... அவருக்கே நிபந்தனையா?

English summary
Shruthi Hassan has revealed that why she was walked out from Sangamithra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil