twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டும்.. தியேட்டர்களை புறக்கணிப்பது ஏன்?

    |

    சென்னை: நாளை (பிப்ரவரி 1 2021) முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், இன்னும் சில ஹீரோக்கள் தியேட்டர் ரிலீஸை விரும்பாமால் ஒடிடி தளங்களையே நாடுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

    அவர்தான் இதிலும் ஹீரோயினாமே? டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்! அவர்தான் இதிலும் ஹீரோயினாமே? டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்!

    தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாகப் போகிறது என்கிற தகவல் தான் மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பி இருக்கிறது.

    தியேட்டர்களை மூடிய கொரோனா

    தியேட்டர்களை மூடிய கொரோனா

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில் அவசர அவசரமாக நாடு முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் காரணமாக கடந்த பல மாதங்களாக தியேட்டர் ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. மற்ற துறைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும் கூட, கேளிக்கை துறையான தியேட்டருக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    கைவிட்ட பெரிய படங்கள்

    கைவிட்ட பெரிய படங்கள்

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், பெரிய பட்ஜெட் படங்களான சூரரைப் போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் தியேட்டர்களை ஆதரித்து இருந்தால், 2020ம் ஆண்டு இறுதியிலே தியேட்டர் தொழில் மீண்டு இருக்கும். ஆனால், அந்த இரு படங்களும் ஒடிடியில் தான் வெளியாகின.

    பொங்கலுக்கும் ஒடிடியில்

    பொங்கலுக்கும் ஒடிடியில்

    தீபாவளிக்கு தியேட்டர்கள் திறந்தாலும் மக்கள் திரையரங்குகளுக்கு வர அஞ்சுவார்கள் என்றே ஒடிடி ரிலீஸை பெரிய படங்கள் ஊக்குவித்ததாக சொல்லப்பட்டன. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மாதவனின் மாறா மற்றும் ஜெயம் ரவியின் பூமி படங்கள் ஒடிடி தளங்களிலேயே வெளியாகின.

    மாற்றிய மாஸ்டர்

    மாற்றிய மாஸ்டர்

    அரசிடம் 100 சதவீத இருக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திய விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட தீர்மானித்தார். ஆனால், கடைசி நேரத்தில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கூடாது என தடை போடப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுடன் படத்தை வெளியிட்டாலும் வசூல் செய்ய முடியும் என மாற்றி காட்டியது மாஸ்டர்.

    ஒடிடியில் ஜகமே தந்திரம்

    ஒடிடியில் ஜகமே தந்திரம்

    வரும் பிப்ரவரி மாதம் முதல் தியேட்டர்களிலேயே 100 சதவீதம் இருக்கைகளுடன் படங்களை வெளியிட அனுமதி கிடைத்த பிறகும் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாக போகிறது என்கிற தகவல் வலம் வந்துள்ளது ஏகப்பட்ட கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.

    பெரிய ஹீரோ படங்கள்

    பெரிய ஹீரோ படங்கள்

    மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனனின் புஷ்பா, கேஜிஎஃப் சாப்டர் 2, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தனுஷின் கர்ணன் திரைப்படமும் வரும் ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிடியில் ஏன்

    ஒடிடியில் ஏன்

    இந்நிலையில், மீண்டும் தனுஷ் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கல் ஒடிடியில் நேரடியாக வெளியாவது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஒடிடி ரிலீஸை விட தியேட்டரில் வெளியானாதால் இத்தனை நாட்கள் ஹீரோக்களை வளர்த்து விட்ட தியேட்டர் தொழில் தொடர்ந்து இயங்கும் என்கிற நிலையில், மேலும், சில பெரிய நடிகர்களின் படங்கள் ஒடிடியை நாடி செல்வதன் காரணம் என்ன? என்கிற கேள்வி பூதாகரமாக கிளம்பி நிற்கிறது.

    English summary
    Why some movies skipping theater release after 100 percent seat allocation in Theaters question raised by moviegoers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X