»   »  'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா?'- பறந்து செல்ல வா குழு பரவசம்

'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா?'- பறந்து செல்ல வா குழு பரவசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாதாரணப் படமாகத்தான் இருந்தது பறந்து செல்ல வா... ஆனால் கலைப்புலி தாணு தன் சொந்த பேனரில் இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்ததுமே கவனத்துக்குரிய படமாகிவிட்டது.

Why Thaanu release Paranthu Sella Vaa movie?

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'பறந்து செல்ல வா'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ளனர். தனபால் பத்மநாபன் படத்தை இயக்கியுள்ளார்.

Why Thaanu release Paranthu Sella Vaa movie?

இந்தப் படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் கூறுகையில், "இந்தப் படம் எந்த அளவு வணிக ரீதியாக அனைவரையும் திருப்திப்படுத்தும் என்பதற்கு சான்று, படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட முன்வந்திருப்பதுதான். அவர் அத்தனை சுலபத்தில் ஒரு படத்தை வெளியிட முன்வர மாட்டார். அவர் இந்தப் படத்தைப் பார்த்ததும், சிறப்பாக வந்துள்ளது நானே வெளியிட்டுவிடுகிறேன் என்று ஆர்வத்துடன் சொன்னார். எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டதாக அப்போதே உறுதியாகிவிட்டது," என்றார்.

English summary
Paranthu Sella Vaa movie producer Arumaichandiran has proud to release his movie under Kalaipuli Thaanu banner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil