விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல டைரக்டர்...ஏன்னு காரணம் தெரியுமா ?
சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. அங்கு முக்கியமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. சில நாட்களுக்கு முன் வில்லன் பற்றிய அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டது.

எதிர்பார்ப்பை கிளப்பிய செல்வராகவன்
இந்த படத்தில் விஜய்க்கு 3 வில்லன்கள் இருப்பதாகவும், அவர்களில் முக்கிய வில்லனாக டைரக்டர் செல்வராகவன் நடிப்பதாகவும் கூறப்பட்டது. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தது போல், இந்த படத்தில் செல்வராகவனை நடிக்க வைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பரபரப்பான சாணி காயிதம்
நடிகராக அறிமுகமாகும் முதல் படமான சாணி காயிதத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து வருகிறார் செல்வராகவன். இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரண்டாவது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்பதால் இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இவரை தான் முதலில் கேட்டாரா
ஆனால் பீஸ்ட் படத்தில் முதன்மை வில்லன் ரோலில் நடிக்க டைரக்டர் நெல்சன், முதலில் டைரக்டர் மிஷ்கினை தான் கேட்டுள்ளார். அவரும் முதலில் ஓகே சொல்லி விட்டாராம். பிறகு திடீரென பீஸ்ட் படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகி விட்டாராம் மிஷ்கின்.

இது தான் காரணமா
பீஸ்ட் படத்தில் மிஷ்கின் நடிக்க மறுத்ததற்கு காரணம், அதே தேதிகளை அவர் ஏற்கனவே தான் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக ஒதுக்கியது தானாம். ஆண்டிரியா, விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தின் வேலைகளில் மிஷ்கின் பிஸியாக உள்ளார். இந்த படத்தில் அவரும் ஒரு ரோல் பண்ண உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யால் நடிக்க முடியல
மிஷ்கின் ஏற்கனவே விஜய் நடித்த யூத் படத்தில் அசிஸ்டென்ட்டாக பணியாற்றி உள்ளார். பிறகு டைரக்டர் ஆனதும் விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அதற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் விஜய் பிஸியாக இருந்ததால் மிஷ்கின் டைரக்ஷனில் இதுவரை விஜய்யால் நடிக்க முடியவில்லையாம்.


Click it and Unblock the Notifications











