என்ன வரலட்சுமி இப்படி சொல்லிட்டாரே...ராதிகா – சரத்குமார் பந்தம் லேசுப்பட்டதா?

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா. இதுவரை 275 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர், அரசியல் தலைவர் என பல முகங்களைக் கொண்ட ராதிகா, பல டிவி சீரியல்களை தன்னுடைய ராடன் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து பிரபலமானவர்.

தற்போது வரை தொடர்ந்து சினிமா, சீரியல் என பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் தனது குடும்பத்திற்காகவும் நேரத்தை செலவிடுவது, அவர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற போட்டோக்களையும் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்து வருகிறார்.

கிசுகிசுக்களில் சிக்கிய ராதிகா

கிசுகிசுக்களில் சிக்கிய ராதிகா

நடிகைகளில் அதிகம் கிசுகிசுக்களில் சிக்கிய நடிகைகளில் ராதிகாவும் ஒருவர். பல டாப் ஹீரோக்களுடன் காதல் கிசுகிசுக்களில் அடிப்பட்ட ராதிகா , பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டு, வெகு விரைவிலேயே இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பிறகு வெளிநாட்டினரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதிகாவிற்கு ராடன் என்ற மகள் உள்ளார்.

சரத்குமார் - ராதிகா திருமணம்

சரத்குமார் - ராதிகா திருமணம்

அவரை பிரிந்த ராதிகா, 2001 ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை 2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் ஆகிய இரண்டு படங்களில் சேர்ந்த நடத்த இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்து, பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். 2016 ம் ஆண்டு மகள் ராடனை அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரருக்கு திருமணம் செய்து கொடுத்த ராதிகாவிற்கு பேரனும் உள்ளான்.

21 வருட திருமண வாழ்க்கை

21 வருட திருமண வாழ்க்கை

கிட்டதட்ட 21 ஆண்டுகள் ராதிகாவும், சரத்குமாரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு தான் சரத்குமாருடன் இணைந்து, ராதிகா அரசியலிலும் ஈடுபட துவங்கினார். சன் டிவியில் பிரைம் டைம் சீரியல் என்றாலே அது ராதிகாவின் சீரியலாக தான் இருக்கும் என்னும் அளவிற்கு இருந்தது. சித்தி, அண்ணாமலை, செல்வி, சித்தி 2 உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்து, அவற்றின் லீட் ரோல்களிலும் நடித்து வெற்றி பெற்றவர்.

தொழிலில் சறுக்கல்

தொழிலில் சறுக்கல்

சமீபத்தில் சன் டிவியில் இருந்து விலகிய இவர், இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என கூறினார். ஆனால் சமீபத்தில் புதிய சீரியல் ஒன்றின் மூலம் கலைஞர் டிவியில் என்ட்ரி கொடுத்துள்ளார். ராதிகா சன் டிவியில் இருந்து விலகியதற்கு பல விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இருந்தாலும் சன் டிவியில் இருந்து விலகிய பிறகு அவருக்கு தொழிலில் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

ஓப்பனாக பேசிய வரலட்சுமி

ஓப்பனாக பேசிய வரலட்சுமி

தொழிலில் தான் இப்படி, குடும்ப வாழ்க்கையாவது நன்றாக போய் கொண்டிருக்கிறது என்றால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் வரலட்சுமி கூறிய விஷயங்கள் குடும்பத்திலும் சிக்கலை கொண்டு வந்துள்ளது. பேட்டியில், குடும்பம் பற்றிய மோசமான கமெண்ட்களை ராடன் எப்படி எதிர்கொள்கிறார் என்று தான் கேட்கப்பட்டது. ஆனால் ராடனை பற்றி ஒரே வரியில் பதில் சொல்லி முடித்த வரலட்சுமி, ராதிகாவை நான் எதற்காக அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் எனக்கு அம்மா கிடையாது. எனது அப்பாவின் இரண்டாவது மனைவி என பொசுக்கென சொல்லி விட்டார்.

வரலட்சுமி ஏன் அப்படி பேசினார்

வரலட்சுமி ஏன் அப்படி பேசினார்

அது மட்டுமா, ராடனின் அப்பா வேறு. என்னுடைய அப்பா வேறு. அவரின் அம்மா எனது அப்பாவை திருமணம் செய்து கொண்டதால் எனது அப்பா அவருக்கும் அப்பா ஆகி உள்ளார் என ஓப்பனாக சொல்லி விட்டார். சோஷியல் மீடியாக்களில் பார்ட்டி, பிறந்தநாள் என ஒன்றாக ஒரே குடும்பமாக சேர்ந்து கொண்டாடிய போட்டோக்கள், கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் போது எதற்காக பேட்டியில் இப்படி ஒரு காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தினார் என தெரியவில்லை.

ராதிகாவிற்கு போறாத காலம்

ராதிகாவிற்கு போறாத காலம்

இத்தனைக்கும் ராதிகாவும் - சரத்குமாரும் அன்பான கணவன்- மனைவியாக தான் இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அரசியல், சினிமா, குடும்பம் என அனைத்திலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் உறவில் எங்கே சளைத்தது என்று வரலட்சுமி இப்படி பேசி உள்ளார். பாவம் ராதிகாவிற்கு நேரம் சரியில்லை போல...அது தான் நல்ல போய் கொண்டிருந்த தொழில், குடும்பம் என அனைத்தும் சறுக்கலை சந்தித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X