twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ஹீரோவா? வேண்டாம் என் மகனை ஹீரோவா போடு... பிரபல தயாரிப்பாளரால் சிக்கித் தவித்த இயக்குனர்!

    |

    சென்னை : விஜய்யின் திரைப்படங்கள் இப்பொழுது இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் பெற்றுள்ளன.

    மாஸ்டர் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில் இயக்குனர் நந்தகுமார் தன்னுடைய படத்தில் விஜய்யை ஹீரோவாக வேண்டாம் தன் மகனை ஹீரோவாக போடுமாறு பிரபல தயாரிப்பாளர் கூறியதாக தனியார் யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

    தெலுங்கில் ரீமேக்காகும் வினோதயா சித்தம்… சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் நடிக்கும் உச்ச நடிகர்தெலுங்கில் ரீமேக்காகும் வினோதயா சித்தம்… சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் நடிக்கும் உச்ச நடிகர்

    இந்திய அளவில் மார்க்கெட்

    இந்திய அளவில் மார்க்கெட்

    மாஸ்,கிளாஸ், டான்ஸ் என தனது ஒவ்வொரு படங்களிலும் ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தி வரும் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தென் இந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது. மாஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் இப்பொழுது இந்திய அளவில் உயர்ந்துள்ள நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்திய படங்களாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பில் பிரம்மாண்ட பொருட் செலவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

    படப்பிடிப்பு ஹைதராபாத்தில்

    படப்பிடிப்பு ஹைதராபாத்தில்

    இந்த நிலையில் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது . அட்லி,வெற்றிமாறன், ஏ ஆர் முருகதாஸ் என அடுத்தடுத்து விஜய் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

    3 கோடிக்கு மேல் பட்ஜெட்

    3 கோடிக்கு மேல் பட்ஜெட்

    பி.வாசு உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் நந்தகுமார் கதை ஒன்றை விஜய்யிடம் கூறியுள்ளார். அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக, அப்பா எஸ்.ஏ சந்திரசேகரும் அந்த கதையை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துவிட்டது 2 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்க முடியும் என்றால் தான் ஒரு தயாரிப்பாளரை அறிமுகம் செய்வதாக கூறினாராம். ஆனால் இந்த படம் 3 கோடிக்கு மேல் செலவு ஆகும் என்பதால் இயக்குனர் நந்தகுமார் அப்போது ஜென்டில்மேன், ரட்சகன், காதல் தேசம்,காதலன் என பிரமாண்ட படங்களை எடுத்த தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகனிடம் கதையை கூறியுள்ளார்.

    விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம்

    விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம்

    குஞ்சு மோன் கதையை கேட்டுவிட்டு இந்த படத்தில் விஜய்யை ஹீரோவாக போட வேண்டாம் என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய் வேண்டும் என கூறினாராம். ஆரம்பத்தில் தயக்கத்துடன் இருந்த நந்தகுமார் அதன் பிறகு வேறு வழியில்லாமல் குஞ்சு மோன் மகனை ஹீரோவாக வைத்து சுமார் 4 கோடி பட்ஜெட்டில் கோடீஸ்வரன் என்ற படத்தை இயக்கினார்.

    English summary
    Why Vijay? Make my son as Hero Says KT Kunju Mon to Director nanthakumar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X