For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  விஜய் பேசிய அரிசி அரசியல்... ஆழம் பார்க்கிறாரா?

  By Shankar
  |

  தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திடம் பறிகொடுத்த ஆட்சியை தேர்தல் மூலம் வென்றெடுக்க இரண்டாவது முறையாக ஜெயலலிதா போராடிக் கொண்டிருந்தார்.

  கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் தனக்கு இணையாக, எதிரியாக கருதாத கர்வம் கொண்டவர் ஜெயலலிதா.

  Why Vijay talks 'rice politics'?

  முந்தைய தேர்தலில் தன் கட்சி வெற்றி வாய்ப்பு பறிபோக குறைந்தபட்ச காரணமாக இருந்த விஜயகாந்த் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டார்
  வேறு வழியின்றி.

  இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் அதிமுக தேர்தலில் வெற்றி பெற உழைப்பது என முடிவெடுத்தது.

  இம் முடிவை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜெயலலிதா இதனை ரசிக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை.

  திமுக ஆட்சி மீது இருந்த வெறுப்பு அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்தது, ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா.

  அதிமுக வெற்றி பெறக் காரணமான விஐய் ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஐய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர்,
  தமிழகமெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஜெயலலிதா -விஐயகாந்த் செல்வாக்கை சிறுமைபடுத்துவதாக ஜெயலலிதா தரப்பில் இச்செயல் கருதப்பட்டாலும் அதனை அவர்கள் விமர்சனமாக வெளிப்படுத்தவில்லை.

  துண்டு துக்கடா கட்சி நிர்வாகிகளைக் கூட சந்திக்க நேரம் ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்ஏ சந்திரசேகர் - விஐய் தரப்பை சந்திக்க நேரம் ஒதுக்கி அனுமதி தரவில்லை.

  தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த SA சந்திரசேகர் சங்கம் சார்பில் சந்திக்க நேரம் கேட்டும் நிராகரிக்கப்பட்டது.

  Why Vijay talks 'rice politics'?

  தன் மகன் விஜய் ரசிகர் மன்றத்தை தமிழக அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த
  எஸ்ஏ சந்திரசேகர் கையாண்ட அணுகுமுறை ஒட்டு மொத்த திரைப்பட துறையையும், தமிழக அரசு தீண்ட தகாதவர்களாக ஒதுக்கி வைக்க காரணமாக இருந்தது.

  தமிழக முதல்வராக யார் வந்தாலும் திரைத் துறையினருடன் நெருக்கத்தை வைத்துக் கொள்வது வாடிக்கை. சந்திரசேகர் அறிக்கையால் கோபமுற்ற ஜெயலலிதா சினிமாவுக்கான எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூட அனுமதிக்கவில்லை.
  சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியம் நிறுத்தி வைக்கப்பட்டது, அரசு விருது வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.

  நடிகர் வையாபுரி கூட ஜெயலலிதாவைச் சந்திக்க முடிந்தது. ஐம்பது ஆண்டு காலம் தமிழகத்தை ஆள கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு அடித்தளம் அமைத்து கொடுத்த தமிழ் திரைப்பட துறையினருக்கு சந்திக்க நேரம் ஒதுக்க செல்வி ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இரண்டாவது முறை வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆன பின்னும் சினிமா துறையினரை நெருங்க விடவில்லை. இன்று அவர் இல்லை. அதன் விளைவு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிறான்' என கிராமத்து பழமொழி ஒன்று உண்டு.

  அந்த நிலை தமிழக அரசியல் களத்தில் இப்போது எதிரொலிக்கிறது. ஜெயலலிதா அதிக பட்ச அதிகார மமதையில் இருந்த போது அவர் தலைமை தாங்கிய விழாவில் நேருக்கு நேராக பொது மேடையில் அதிமுக ஆட்சியை விமர்சித்தவர் ரஜினிகாந்த்.

  தனக்கு பாதிப்பு ஏற்பட்ட போது, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தமிழக அரசியலை விமர்சித்து வந்த ரஜினி, அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

  ஆனால் தமிழக முதல்வராக வேண்டும் என்கிற ஆசை நடிகர் விஜய்க்கு உண்டு. அதற்கான ஆயத்த ஏற்பாடுகளே விஐய் மக்கள் இயக்கம் தொடக்கம் என்பார்கள்.
  விஜய் தான் நாயகனாக நடிக்கும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு கூட வராதவர்.

  நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்நிகழ்சியில் அவர் அரிசி அரசியல் பற்றி பேசியுள்ளார்.

  Why Vijay talks 'rice politics'?

  "நாம் நன்றாக உள்ளோம் ஆனால் சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை. வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாற வேண்டும்

  விவசாய பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும்

  இப்போதும் ஆரோக்கியமில்லாத உணவுதான் கிடைக்கிறது

  அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலையும் ஏற்படும்

  அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக நிற்கிறார்கள்

  3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது..."

  தமிழகத்தில் 1977ல்எம்.ஜி.ஆர் ஆட்சியை கைப்பற்ற காரணமாக இருந்த அரிசி அரசியலை, இப்போது பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

  காரணம் விஜய் பேசியிருப்பது உள்ளூர் பிரச்சினை அல்ல... சர்வதேச அரசியல். இந்தியாவில் விவசாயிகள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்குக் காரணம் பன்னாட்டு (IMF) வங்கி நிர்வாகமே. அவர்கள் விருப்பத்திற்கிணங்கவே இந்திய விவசாய கொள்கை தீர்மானிக்கப்படுகிறது.

  விஜய் பேசியது இயல்பானது அல்ல இதற்கு பின்னால் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் இருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சினிமா நடிகர் விஜய் சினிமா விழாவில் சம்பந்தமில்லாமல் பேசியிருப்பது வேடிக்கை அல்ல,
  அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தம் என்கிறது அரசியல் ஆய்வாளர்கள் வட்டாரம்.

  - ராமானுஜம்

  English summary
  Why Vijay has suddenly outbursted in farmers issue in a award show? Here is the reasons behind his rice politics speech.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more