»   »  ஆஸ்தான ஜோசியர் ஆலோசனைப்படி அரசியல் படத்தில் நடிக்கும் கேப்டன்

ஆஸ்தான ஜோசியர் ஆலோசனைப்படி அரசியல் படத்தில் நடிக்கும் கேப்டன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி மகனுடன் நடிக்கும் அரசியல் படத்திற்கு 'தமிழன் என்று சொல்' என்ற தலைப்பினை விஜயகாந்த் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில், விஜயகாந்த் பாணி சண்டை காட்சிகளும், அனல் பறக்கும் அரசியல் வசனங்களும் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'தமிழன் என்று சொல்'. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை வரதராஜன் தயாரிக்க இருக்கிறார்.

Why Vijayakanth back to acting?

அநீதிகளை தட்டிக்கேட்டும் படம்

ரமணா படத்தை போல, மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்டும் கதையம்சம் உள்ள படத்தில், தன் மகன் சண்முகபாண்டியனை நடிக்க வைக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்பினார்; அந்த படத்தில், தானும் நடிக்கவும் திட்டமிட்டார். இதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், அவரது மூத்த மகனும் 50க்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதையை கேட்டனர்.

ஜோதிடர் ஆலோசனை

இந்த எண்ணத்தோடு, சமீபத்தில், தன் ஆஸ்தான ஜோதிடரை விஜயகாந்த் சந்தித்து ஆலோசித்தார். அப்போது ஜோதிடர், 'ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் முழக்கமான, 'ஐ நெவர் டிலே இன் ஆக் ஷன்' என்ற மையக் கருத்தை அடிப்படையாக வைத்து, கதை உருவாக்குங்கள்; படம் வெற்றியடையும்' என்று கூறினாராம்.

தமிழன் என்று சொல்...

அதைத் தொடர்ந்தே, தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா ... இந்தியனாக இரு; நல்ல தமிழனாக வாழு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, படத்தின் கதைக்கரு உருவாக்கப்பட்டு, தமிழன் என்று சொல் என பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர் போல திட்டம்

அதிரடி திரைப்படங்கள், பஞ்ச் வசனங்கள் மூலம் எம்.ஜி.ஆர்., தன் அரசியல் செல்வாக்கை உயர்த்தியதைப் போல, விஜயகாந்தும், சட்டசபை தேர்தலுக்கு முன், தன் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அதற்காகவே, தமிழன் என்று சொல் படத்திற்கு பெயரிடப்பட்டு விஜயகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் வசனங்கள்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பழைய பன்னீர் செல்வமாக சினிமாவில் களமிறங்கப்போகும் விஜயகாந்த் மகனுடன் நடிக்கும் இந்த புதிய படத்தில் பஞ்ச் டயலாக்குகளும், அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இடம் பெறும்.இவ்வாறு கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த படம் தேர்தலுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்தால், விஜயகாந்த் நினைப்பது போல, அவரது செல்வாக்கு உயரும் என்றும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லாம் திட்டமிட்டுதான்

பட பூஜை விழாவில் பேசிய விஜயகாந்த், " நானே மக்கள் பணி என்று போய்க் கொண்டிருக்கிறேன், என்னுடைய மூத்த மகன், "நீங்க நடிக்கிறீங்க" என்று சொல்லிவிட்டான். மகன் சொல்லிவிட்டான், மொழிப் படம் வேறு உடனே இயக்குநரிடம் "ஏன்பா.. தமிழ்நாட்டில் வேறு நடிகர்களே இல்லயா" எனக் கேட்டேன். இயக்குநரும் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றவுடனே, கண்டிப்பாக பண்றேன் என்று தெரிவித்துவிட்டேன்" என்று கூறினார். ஆனால் எல்லாம் திட்டமிட்டு ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படிதான் நடக்கிறதாம்.

விஜய், சூர்யாவிற்காக விஜயகாந்த்

விஜயகாந்த் பிரபல கதாநாயகனாக நடித்த போதே விஜய், சூர்யாவிற்காக கடந்த காலங்களில் பெரியண்ணா, செந்தூரப்பாண்டிஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்போது மகனுக்காக மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் விஜயகாந்த், எல்லாம் மகனின் சினிமா எதிர்காலத்திற்காகத்தான் என்கின்றனர்.

English summary
Vijayakanth's is acting again because of his astrologer's adivse to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil