»   »  நாம ஏன் "24" படத்தைப் பார்க்க வேண்டும்?

நாம ஏன் "24" படத்தைப் பார்க்க வேண்டும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா, சமந்தா, நித்யாமேனன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '24'. விக்ரம் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இப்படத்தை உலகம் முழுவதும் 2௦௦௦ க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது.


இந்நிலையில் நாளை வெளியாகும் இப்படத்தை ஏன் பார்க்க வேண்டும்? என்பதற்கான 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்.


டைம் டிராவல்

டைம் டிராவல்

பொதுவாக டைம் டிராவல் கதைகள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்தமானவை. எனினும் தமிழில் ஒரு முழுநீள டைம் டிராவல் படங்கள் இன்னும் வெளியானதில்லை. அந்தவகையில் தமிழ் ரசிகர்களுக்கு டைம் டிராவல் படங்கள் முற்றிலும் வித்தியாசமானது என்பதால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.


வில்லன்

வில்லன்

இப்படத்தில் சூர்யா ஹீரோ, வில்லன் என 3 கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். எந்தப் படத்திலும் இதுவரை சூர்யா வில்லன் வேடத்தில் நடித்ததில்லை. அதனால் வில்லனாக ஆத்ரேயாவின் பெர்பாமென்ஸைக் காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


2௦௦௦ அரங்குகளில்

2௦௦௦ அரங்குகளில்

சூர்யாவின் திரை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, உலகம் முழுவதும் சுமார் 2௦௦௦க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இதுகுறித்து 200 கோடி கிளப்பில் இப்படம் இணைய வேண்டும் என விரும்புவதாக சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இருவரும் கூறியுள்ளனர். அதிக அரங்குகளில் வெளியாவதும் கூட இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடத்தில் உண்டாக்கியுள்ளது.


குடும்பத்துடன்

குடும்பத்துடன்

இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தணிக்கைக் குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இயக்குநர் விக்ரம் குமார் படத்தைப் பார்க்கும் 6 வயது சிறுவன் கூட இப்படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். இதனால் குடும்பத்துடன் இப்படத்தைக் கண்டுகளித்திட ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். இதுதவிர கோடை விடுமுறையில் வெளியாவதும் படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது.


ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான '24' பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இதனால் பாடல்களின் விஷுவல் காட்சிகளை கண்டுகளித்திடவும் ரசிகர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். சுமாரான படங்கள் கூட பாடல்களால் ஹிட்டடித்த வரலாறு தமிழ் சினிமாவில் ஏகத்திற்கும் உண்டென்பது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களின் எதிர்பார்ப்பை '24' பூர்த்தி செய்யுமா? நாளைவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Why we Should Watch Surya's 24 Movie - Top 5 Reasons Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil