»   »  என் கணவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும்! - கலாபவன் மணியின் மனைவி

என் கணவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும்! - கலாபவன் மணியின் மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என் கணவர் கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவர் மனைவி கேரள அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கணவரின் உடல் ரசாயன பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், இந்த மரணம் குறித்து உயர் மட்டக் குழு அமைத்து விசாரிக்கவும் தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்திருந்தார்.

Wife urges govt to expose the mystery in Kalabhavan Mani's death

இந்த நிலையில் கலாபவன் மணி மனைவி நிம்மி அளித்த பேட்டி:

"எனது கணவர் கலாபவன் மணி வாழ்க்கையின் மிகவும் கஷ்டப்பட்ட முன்னுக்கு வந்தவர். எனவே அவர் ஒருபோதும் தற்கொலை செய்யமாட்டார். அவர் மன உறுதிமிக்கவர். தற்கொலை எண்ணம் அவருக்கு வராது.

சமீப காலமாக அவர் மது அருந்துவதை நிறுத்தி இருந்தார். நண்பர்கள் வற்புறுத்திதான் மது விருந்தில் அவரை மது அருந்த வைத்துள்ளனர். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை உலகம் அறியச் செய்ய வேண்டும்", என்றார்.

English summary
Kalabhavan Mani's wife Nimmy urged the govt to expose the mystery in the death of her husband Kalabhvan Mani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil