For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிரித்த முகத்துடன் உள்ளே வந்த சுசித்ரா.. கமலுக்கு கொடுத்த சூப்பர் பரிசு.. தூக்கி கொஞ்சிய அர்ச்சனா!

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வேல்முருகன் வெளியே போனதும், அந்த இடத்தை நிரப்ப பாடகி சுசித்ரா அசத்தலாக உள்ளே நுழைந்தார்.

  முதல் சீசனில் இருந்தே சர்ச்சைக்கு பேர் போன சுசித்ராவை விஜய் டிவி வலை போட்டு வீசிய விஷயத்தை சொன்ன, சுசித்ரா, இப்போ தனக்கு வர வேண்டிய தேவை வந்ததால், வந்து விட்டேன் என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

  கூடவே கமல் சாருக்கு சூப்பர் பரிசு ஒன்றையும் கொடுத்த சுசித்ரா வீட்டுக்குள் சென்றார்.

  பச்சை கலரு பனியன்.. பக்காவா இருக்கும் சிரிப்பு.. சன் டே அதுவுமா ஷிவானி அம்மா போட்ட போஸ்ட்!

  சுசித்ரா என்ட்ரி

  சுசித்ரா என்ட்ரி

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வந்த நிலையில், இப்போ அடுத்த வைல்டு கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா உள்ளே நுழைந்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை எபிசோடின் இரண்டாவது புரமோவிலேயே சுசித்ராவின் என்ட்ரி சர்ப்ரைஸ் முடிந்த நிலையில், நிகழ்ச்சியில், சுசித்ராவின் அழகான பேச்சுக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தின.

  அடுத்த ஓவியா

  அடுத்த ஓவியா

  வேல்முருகன் போன கையோடு, சுசித்ரா, துள்ளி குதித்து ஓடி வந்ததை பார்த்த ரசிகர்கள், இவர் தான் அடுத்த ஓவியா என்று கம்பேர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். பிக் பாஸ் ரசிகர்கள், பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்துத் தானே கம்பேர் பண்ணுவார்கள். சிரிச்சிக்கிட்டும் துள்ளி குதிச்சிக்கிட்டும் ஓவியா மாதிரியே இருப்பாரா? இல்லை வந்த உடனே அர்ச்சனாவுக்கு ஷட் அப் எமோஜி கொடுத்தது போல அலற விடுவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  சுய புராணம் இருக்கும்

  சுய புராணம் இருக்கும்

  சூரியன் எஃப்.எம் ஆர்.ஜேவாக அறிமுகமாகி ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி கலக்கிட்டு இருந்த சுசித்ரா, திடீரென அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, பல நடிகர்களின் பலான படங்கள் வெளியானதில் இருந்து அவரது வாழ்க்கையே மாறி விட்டது. சுசித்ராவை விவாகரத்து செய்தது குறித்து கார்த்திக் குமார், ஸ்டாண்ட் அப் காமெடியாக பேசி விட்டார். பிக் பாஸ் வீட்டில் தனது சுய புராணத்தை அழுகையோடு சுசித்ரா பேசி, தனது ரியல் முகத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கமலுக்கு சூப்பர் பரிசு

  கமலுக்கு சூப்பர் பரிசு

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் அறிமுகமாகும் வாய்ப்பு சுசித்ராவுக்கு கிடைத்தது. கமலை பார்க்க சும்மா வெறுங்கையுடனா போவது, வார வாரம் அருமையாக புத்தகங்களை பற்றி பேசும் அவருக்கு ஒரு புத்தகத்தையே பரிசாக கொடுத்து விடலாம் என இந்திய ரெசிபிக்கள் அடங்கிய சமையல் கலை புத்தகத்தை பரிசாக அளித்தார்.

  சுரேஷ் அர்ச்சனா ரியாக்‌ஷன்

  சுரேஷ் அர்ச்சனா ரியாக்‌ஷன்

  பிக் பாஸ் வீட்டை வந்த நாள் முதல் அர்ச்சனா வரும் நாள் வரை ஆண்டு கொண்டிருந்த மொட்டை தல சுரேஷும், அர்ச்சனாவின் என்ட்ரிக்கு பிறகு டோட்டல் கன்ட்ரோலும் அவங்க கிட்ட இருக்கிற நிலையில், இப்போ புதுசா ஒருத்தங்க ஆப்பு வைக்க வராங்களா என அர்ச்சனா கணக்கு போட்ட ரியாக்‌ஷன்களும் சூப்பர்.

  அம்மா CHARACTERம் OK தான் | CLOSE CALL WITH ACTRESS INEYA | FILMIBEAT TAMIL
  தூக்கிக் கொஞ்சிய அர்ச்சனா

  தூக்கிக் கொஞ்சிய அர்ச்சனா

  நல்லா பிரம்மாண்டமா இருக்கிற அர்ச்சனா அக்கா, ஒல்லிக் குச்சியாய் உள்ளே நுழைந்த சுசித்ராவை பார்த்ததும், அப்படியே தூக்கிக் கொஞ்சிட்டாங்க, ஆனால், இந்த கொஞ்சல்லாம் இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கப் போகுது, முதல் ஷட் அப் எமோஜியே உங்களுக்குத் தான் கொடுத்ததை நாங்க புரமோவிலேயே பார்த்துட்டோமேன்னு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

  English summary
  Singer Suchitra entered into Bigg Boss Tamil 4 season as a wild card entry. She gave a book gift to Kamal Haasan and Archana lifts her after she entered into the Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X