என்ன வில்லங்கமோ? கேப்டன் டாஸ்க்கில் வெற்றிப் பெற்ற ஆரி.. அர்ச்சனாவுக்கு நேர்ந்தது ஞாபகமிருக்கா?

சென்னை: புரமோவிலேயே அடுத்த வார கேப்டன் ஆரி தான் என்பதை காட்டிய நிலையில், ஆரி ஆர்மியினருக்கு சற்றே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் அர்ச்சனா கேப்டன் போட்டியில் வெற்றிப்பெற்ற நிலையில், அவரை அந்த வாரம் வெளியே அனுப்பி விட்டார்கள்.

இந்த வாரம் ஆரிக்கும் அதிரடியாக எவிக்‌ஷன் இருக்குமா? என்கிற அச்சம் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன.

டாலடிக்கும் முகங்கள்

டாலடிக்கும் முகங்கள்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக ஒரே பரிசு மழையும், கேக் கட்டிங்குமாக களைகட்டியது. கடந்த சில நாட்களாக தூக்கம் இல்லாமல் விளையாடிய பிக் பாஸ் போட்டியாளர்களின் டல் அடித்த முகங்கள் எல்லாம் இப்போ டாலடிக்க தொடங்கி விட்டது.

கேப்டன் பதவிக்கு போட்டி

கேப்டன் பதவிக்கு போட்டி

நேற்றைய எபிசோடில் அடுத்த வாரத்துக்கான கேப்டன் பதவிக்கு போட்டியிட ரியோ, சோம் மற்றும் ஆரி தேர்வானார்கள். இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் கேப்டன் டாஸ்க் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரியோ, சோம், ஆரி பலமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட போட்டியை போட்டிப் போட்டு விளையாடி உள்ளனர்.

வாயில் ஸ்பூன்

வாயில் ஸ்பூன்

வாயில் ஸ்பூனையும் லெமனையும் வைத்துக் கொண்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் வின்னர் என நர்சரி பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் போட்டியை போல, வாயில் ஸ்பூனை வைத்துக் கொண்டு, தெர்மாகோல் பந்துகளை நிரப்பி பனி பொம்மையின் தலையை உருவாக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

மூவரும் வெயிட்டு தானே

மூவரும் வெயிட்டு தானே

ஆரி, ரியோ ராஜ் மற்றும் சோமசேகர் ஆகிய மூன்று பேரும் திறமையான போட்டியாளர்கள் தான் அவர்களுக்கு இன்னமும் கடினமான ஒரு டாஸ்க்கை கொடுத்திருக்கலாமே என்கிற கேள்வியை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். இதில் என்ன ட்விஸ்ட் இருக்கு என நிகழ்ச்சியில் காணலாம்.

கேப்டன் ஆரி

கேப்டன் ஆரி

இந்த முறை ரியோ ஜெயித்து விட்டுப் போகட்டும் என்றும் இதுவரை கேப்டன் ஆகாத சோமசேகர் வின் பண்ணட்டும் என்றெல்லாம் விடவில்லை. இறங்கி ஆடி தனது ஆட்டத்தில் வெற்றிப் பெற்று அடுத்த வார தலைவராக ஆரி தேர்வாகி உள்ளார். ஆனால், புரமோவிலேயே அதனை காட்டிய இடத்தில் ரசிகர்களுக்கு ஒருவித அச்சம் எழுந்துள்ளது.

அர்ச்சனாவுக்கு நடந்ததுபோல

அர்ச்சனாவுக்கு நடந்ததுபோல

கடந்த வாரம் இதே போலத்தான் அர்ச்சனா கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் வெற்றிப் பெற்றதை புரமோவிலே வெளியிட்டனர். ஆனால், கடந்த வாரம் ஆஜீத்தை சேவ் பண்ணி அர்ச்சனாவை வெளியே அனுப்பி விட்டனர். இந்த வாரம் அர்ச்சனாவுக்கு நடந்ததை போலவே ஆரிக்கும் நடந்து விடுமா? என்கிற அச்சம் ஆரியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நம்பமாட்டார்கள்

நம்பமாட்டார்கள்

ஆனால், அதுபோன்று செய்தால், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் யாரும் நம்பமாட்டர்கள் என்றும், இந்த வாரமும், அடுத்த வாரமும் ஆரி சேஃப் தான். அதனால், தான் ஆரி தான் அடுத்த கேப்டன் எனக் கூறும்போது பாலாவின் முகம் அப்படி வாடி இருந்தது என்றும் அவரது தீவிர ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X