மும்பை பறந்த ஷாலினி... ஶ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த அஜித்தும் செல்வாரா?
Recommended Video

சென்னை : நடிகர் அஜித் ஶ்ரீதேவியின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகத் தான் ஶ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.
துபாய்க்கு ஒரு திருமணத்திற்காகச் சென்ற ஶ்ரீதேவி திடீரென மாரடைப்பால் இறந்து போனார். அவரது உடல் இன்று மாலைக்குள் மும்பை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஶ்ரீதேவியின் இறப்பு குறித்து அஜித் இதுவரை இரங்கல் செய்தி வெளியிடவில்லை. ஆனால், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

ஶ்ரீதேவியின் தீவிர ரசிகர்
அஜித், ஶ்ரீதேவியின் தீவிர ரசிகர் என்பது பலரும் அறிந்ததே. ஒரு விழாவில் ஶ்ரீதேவியின் காலில் அஜித் விழுவது போன்ற புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த அளவுக்கு ஶ்ரீதேவி மேல் மரியாதை கொண்டவர் அஜித்.

இரங்கல் தெரிவிக்கவில்லை
ஸ்ரீதேவியின் இழப்பு ஒட்டு மொத்த இந்தியாவை அதிர்ச்சியாக்கியுள்ளது. பல திரைப் பிரபலங்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால், அஜித் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டு வருகிறது.

மிகுந்த மரியாதை
'இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் ஸ்ரீதேவிக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்படத்தில் அஜித் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம். படத்தை இயக்கிய கௌரி மற்றும் ஸ்ரீதேவி எவ்வளவோ சொல்லியும் அஜித் சம்பளம் வாங்க மறுத்தாராம்.

மனமுடைந்த அஜித் - ஷாலினி
ஶ்ரீதேவி இறந்த தகவல் தெரிந்ததும் துக்கத்தில் இருக்கிறாராம் அஜித். அஜித்தும், ஷாலினியும் வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்ரீதேவியிடம் போனில் பேசி விடுவார்களாம். ஸ்ரீதேவி இறந்த செய்தி அஜித்தையும், ஷாலினியையும் மிகவும் மனமுடைய வைத்துவிட்டதாம்.

மும்பை சென்ற ஷாலினி
இதைத் தொடர்ந்து ஷாலினி நேற்றே மும்பை பறந்துவிட்டாராம். அஜித் கிளம்புகிறாரா என்பது குறித்த தகவல் வரவில்லை. ஆனால், அவர் ஶ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கண்டிப்பாக செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











