»   »  நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜீத் வருவாரா? - பொன் வண்ணன் சொல்வதைக் கேளுங்க!

நட்சத்திர கிரிக்கெட்டுக்கு அஜீத் வருவாரா? - பொன் வண்ணன் சொல்வதைக் கேளுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்க நிதி திரட்டும் கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்வாரா? கடந்த ஒரு வாரமாக படு சூடாக நடந்து வரும் இணைய வெளி விவாதம் இது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே நமது ஒன் இந்தியாதான். தொன்னூறுகளில் நடந்த சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில் அஜீத் பங்கேற்க மறுத்ததோடு, நடிகர் சங்கத்துக்காக மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று கூறி, தன் சொந்தப் பணத்தைக் கொடுக்க முன் வந்தார்.

Will Ajith participate in Star Cricket?

இந்த ப்ளாஷ்பேக்கை நாம் வெளியிட்ட பிறகு, அதுவே புதிய செய்தி மாதிரி இணைய வெளியில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆக, இந்த நட்சத்திரக் கிரிக்கெட்டையும் அஜீத் புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் கேட்ட போது, "அவர் வருவாரா மாட்டாரா என்பதெல்லாம் அவரது தனிப்பட்ட விஷயம். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை.

நடிகர் சங்கம் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பணம் வசூலிப்பதும், அதைக் கொண்டு நல்லகாரியங்கள் செய்வதும் காலகாலமாக நடப்பதுதான்.

சென்னை வெள்ளம் உள்பட பல மக்கள் பிரச்சினைகளுக்காக நடிகர்கள் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்.

இப்போது எங்கள் சக கலைஞர்கள் நலனுக்காக ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம்," என்றார்.

English summary
Will Ajith participated in Star Cricket? Here is Ponvannan's explanation.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil