விலகிய ஆர்ஆர்ஆர்...முதலிடத்திற்கு வந்த வலிமை...திட்டமிட்டபடி ரிலீசாகுமா?

சென்னை : 2022 ம் ஆண்டில் முதல் மெகா பட்ஜெட் படமாக ஆர்ஆர்ஆர் ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், முதலில் ரிலீசாக போகும் மெகா பட்ஜெட் படங்களின் வரிசையில் அஜித்தின் வலிமை முதலிடத்திற்கு வந்துள்ளது.

ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7 ம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிரம்மாண்ட ரிலீசிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த படத்தின் டிரைலர், பாடல் என அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், படமும் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

சாதனையை முறியடிக்கனும்

சாதனையை முறியடிக்கனும்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் ஆர்ஆர்ஆர் நிச்சயம் பாகுபலி 2 படத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். அதோடு முந்தைய அனைத்து வசூல் சாதனைகளையும் இந்த படம் உடைக்க வேண்டும் என பேசி இருந்தனர்.

ஆர்ஆர்ஆர் தள்ளிவைப்பு

ஆர்ஆர்ஆர் தள்ளிவைப்பு

ஆனால் நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டும், சில மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் ரிலீசை தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

ஏப்ரல் மாதத்தில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை சரியான பிறகு புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸ் பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

முதலிடத்தில் வலிமை

முதலிடத்தில் வலிமை

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களின் பட்டியலில் முதலில் இருந்த ஆர்ஆர்ஆர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், முதலில் ரிலீசாகும் படமாக அஜித்தின் வலிமை மாறி உள்ளது. வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமையும் தள்ளிவைக்கப்படுமா

வலிமையும் தள்ளிவைக்கப்படுமா

ஆனால் ஒமைக்ரான் பரவல், கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் திட்டமிட்டபடி வலிமை படம் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது ஆர்ஆர்ஆர் படத்தை போல் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டு, பல காரணங்களால் தள்ளிப் போய், இப்போது தான் வலிமை படம் ரிலீஸ் வரை வந்துள்ளது.

மாஸ்டரை ஃபாலோ பண்ணலாமா

மாஸ்டரை ஃபாலோ பண்ணலாமா

வலிமை படத்திற்காக ஏற்கனவே ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் ரிலீசை தள்ளி வைத்தால் ரசிகர்கள் கோபமடைவார்கள். அதோடு படத்தின் வசூல் பாதிக்கப்படும். இப்போது தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதால், 2021 ம் ஆண்டு துவக்கத்தில் 50 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்து 100 கோடிக்கும் வசூலை பார்த்தார்கள். அது போல் வலிமை படமும் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இப்படி ஒரு சிக்கல் இருக்கா

இப்படி ஒரு சிக்கல் இருக்கா

அதே சமயம், தற்போது 50 சதவீதம் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவு ஜனவரி 10 வரை மட்டுமே. ஆனால் வலிமை ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் தொடர்ந்ததால் அரசு, கட்டுப்பாடுகளை நிச்சயம் தீவிரப்படுத்தும். அந்த சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் அது சரியானதாக இருக்காது. ஜனவரி 10 ம் தேதிக்கு பிறகு எந்த மாதிரியான நிலைப்பாட்டை அரசு எடுக்கும் என்பதை பொருத்தே வலிமை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X