அட நிஜமாதானா...ஏகே 62 படத்தில் இந்த ரோலில் தான் நடிக்கிறாரா அஜித் ?
சென்னை : ஏகே 61 படத்தில் அஜித்தின் கேரக்டர் பற்றி தெளிவாக தெரியாததால் ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில், ஏகே 62 படத்தில் அஜித் என்ன ரோலில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங், ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் விறுவிறுப்பாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 62 அறிவிப்பு
ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 படத்தின் வேலைகள் ஆரம்பித்த உடனேயே ஏகே 62 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டது லைகா ப்ரொடக்ஷன்ஸ். அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை தாங்கள் தான் தயாரிக்க போவதாகவும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அறிவித்து விட்டது. ஏகே 62 படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

3 ஆண்டுகள் உழைத்தேன்
இந்நிலையில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ப்ரொமோஷனுக்காக ட்விட்டர் ஸ்பேசில் பேசிய விக்னேஷ் சிவனிடம் ஏகே 62 கதை பற்றி கேட்ட போது, ஏகே 62 படத்தின் கதைக்காக 3 ஆண்டுகள் உழைத்துள்ளேன். நிச்சயம் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்றார். இதற்கிடையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த விக்னேஷ் சிவன், என்னுடைய 100 சதவீதத்தை கொடுப்பேன்.

இது தான் என்னுடைய டாஸ்க்
படத்தை நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு உண்டு. அஜித் சார் மீது வெறித்தனமாக அன்பு வைத்துள்ள ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் இதில் நான் கொடுக்க வேண்டும். கதையை சரியாக முடிக்க வேண்டும், கதைக்கு ஏற்ற நடிகர்களை நான் சரியாக தேர்வு செய்ய வேண்டும், தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் எனக்கு இருக்கும் டாஸ்க் என்றார்.

ஏகே 62 அஜித் ரோல் இதுவா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின் படி, தமிழ்நாடு முழுவதும் உணவு நிறுவனங்கள் நடத்துபவராக தான் அஜித் நடிக்க போகிறாராம். இதை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். சிவாஜி, படையப்பா, அண்ணாமலை படங்களின் லிஸ்ட்டில் ஏகே 62 படமும் இருக்கும். படம் வேற லெவலில் ஹிட் ஆகும் என இப்போதே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

செம குஷியான ரசிகர்கள்
ஏகே 61 படத்தில் அஜித் வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா, அவர் தான் வில்லனா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஏகே 62 படத்தில் அஜித்தின் ரோல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது சந்தோஷத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











