»   »  கடவுள் எப்ப சொல்வது: ரஜினியை விட்டுவிட்டு அவர் வில்லனுக்கு குறிவைக்கும் பாஜக

கடவுள் எப்ப சொல்வது: ரஜினியை விட்டுவிட்டு அவர் வில்லனுக்கு குறிவைக்கும் பாஜக

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர பாஜக முயன்றது. ஆனால் ரஜினி உறுதியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் பக்கம் பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது.


பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அக்ஷய் குமார்.


சமூக சேவை

சமூக சேவை

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் அக்ஷய். இதனால் மக்கள் மத்தியில் நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு நல்ல பெயர் உள்ளது.


அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அரசியலுக்கு வர அக்ஷய் குமார் தயங்குகிறாராம். ஆனால் அவரை அரசியலுக்கு அழைத்து வருவதில் பாஜக அதிக ஆர்வம் காட்டுகிறதாம். போகிற போக்கை பார்த்தால் பாஜக அவரை அரசியலுக்கு அழைத்து வந்துவிடும் என்று விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்வச் பாரத்

ஸ்வச் பாரத்

அக்ஷய் குமார், பூமி பட்னேகர் நடித்துள்ள டாய்லெட்- ஏக் பிரேம் கதா பிரதமர் நரேந்திர மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

அக்ஷய் குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார். மகாராஷ்டிராவில் அவர்கள் கொண்டு வந்த நீர் சேமிப்பு திட்டத்தில் அக்ஷய் அதிக ஆர்வம் காட்டியதாக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் பிரமோத் பாபட் தெரிவித்திருந்தார்.
English summary
According to reports, BJP is trying its level best to convince Bollywood actor Akshay Kumar to enter politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil