திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்?
சென்னை: நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலமாக அவர் தனது வாழ்க்கை துணையை பிரியப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் பரவி வருகின்றன.
ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.
2019ம் ஆண்டு தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டு மூலம் நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை உண்டானது.

இங்கிலாந்து நடிகை
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த நடிகை எமி ஜாக்சன் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் விஜய்யின் தெறி, தனுஷின் தங்கமகன், விக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ, உதயநிதியுடன் கெத்து, ரஜினிகாந்த் உடன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் திவானா தா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து சிங் இஸ் ப்லிங், ஃப்ரீக்கி அலி உள்ளிட்ட இந்தி படங்களிலும், சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்தார்.

2015ல் காதல்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படம் எமி ஜாக்சனை உலகளவில் பிரபலமாக்கியது. 2015ல் அந்த படம் வெளியான நிலையில், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயிட்டு மற்றும் எமி ஜாக்சன் காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த 2019ம் ஆண்டு எமி ஜாக்சன் கர்ப்பமானார்.

திருமணம் செய்யவில்லை
2019ம் ஆண்டு மார்ச் மாதம் கர்ப்பமானதை அறிவித்ததை அடுத்து மே மாதமே இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் பார்ட்னர்களாக வாழ்ந்தனர்.

ஆண் குழந்தை
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் எமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் இருவரும் அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். ஆண்ட்ரியாஸ் என தனது மகனுக்கு எமி ஜாக்சன் பெயர் வைத்து குழந்தையை வளர்க்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

மீண்டும் நடிப்பு
குழந்தை பிறந்தவுடன் கொஞ்ச மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் நடிகை எமி ஜாக்சன். மேலும், சீக்கிரமே படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும், நடிப்பை எப்போதும் விட மாட்டேன் என்றும் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
Recommended Video

பிரிகிறாரா?
இந்நிலையில், ஜார்ஜ் பன்னாயிட்டுவை நடிகை எமி ஜாக்சன் பிரிகிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணம் நடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் தான். கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் எமி ஜாக்சன்.

என்ன பிரச்சனை
குழந்தை பிறந்ததும் தான் தங்களுக்குள் உறவு மிகவும் நெருக்கமானது என பேட்டி அளித்திருந்த நிலையில், இப்படி திடீரென தானும் குழந்தையும் இருக்கும் புகைப்படங்களை தவிர்த்து, கணவருடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே நடிகை எமி ஜாக்சன் தேடி தேடி அழித்து வருவதை பார்த்து பலரும் இருவருக்கும் இடையே ஏதோ பிளவு ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக விரைவில் எமி ஜாக்சன் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











