»   »  சரி.. அவதார், டைட்டானிக் சாதனைகளை உண்மையில் மிஞ்ச முடியுமா?

சரி.. அவதார், டைட்டானிக் சாதனைகளை உண்மையில் மிஞ்ச முடியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2 உலக அளவில் வசூலில் ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்துவிட்டது இந்திய சினிமாவைப் பொறுத்த வரை ஒப்பிலாத சாதனைதான். சந்தேகமில்லை.

ஆனால் அதைத் தொடர்ந்து சிலர் எழுதி வருவதை நினைத்தால்தான் வேடிக்கையாக உள்ளது. அடுத்து அவதார் சாதனையை முறியடிப்போம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.


Will an Indian film really beat Avatar in future?

இந்தியப் படங்கள் உலகளவில் சாதனைப் புரிவது மனசுக்கு சந்தோஷமாகவே இருந்தாலும், நிஜம் என ஒன்றிருக்கிறதல்லவா?


முதலில் அரங்குகளின் எண்ணிக்கை. அதிகபட்சம் 20000 திரையரங்குகளில் வெளியாகும் அளவுக்கு பரந்து விரிந்த மார்க்கெட் கொண்டது ஹாலிவுட் சினிமா. அந்த இலக்கை நோக்கி இப்போதுதான் நாம் முன்னேற ஆரம்பித்துள்ளோம். அதை ஆரம்பித்து வைத்தவை ரஜினி படங்கள்.


இந்திய சினிமாவில் முதல் முறையாக ஆயிரம் திரைகளுக்கு மேல் வெளியான முதல் படம் சிவாஜி - த பாஸ். அதன் பிறகுதான் பல இந்திப் படங்களே ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகின.


அடுத்து அந்த சாதனையை அவரது எந்திரன்தான் முறியடித்தது. அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 அரங்குகள். அதன் பிறகு பாலிவுட் படங்கள் பிகே போன்றவை 5000 அரங்குகளுக்கு மேல் வெளியாகின. சமீபத்தில் வெளியான கபாலி அதிகபட்சமாக 6000 அரங்குகளில் வெளியானது.


இப்போது பாகுபலி 2 அதிகபட்சமாக 6500 அரங்குகளில் வெளியானது. அதன் பிறகு மேலும் 500 அரங்குகளில் கூடுதலாக வெளியானது. 10 நாட்களாக குறையாத வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. விளைவு 1000 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கைத் தாண்டியுள்ளது.


Will an Indian film really beat Avatar in future?

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் கிட்டத்தட்ட 14,500 அரங்குகளில் வெளியாகி, முதல் 50 நாட்கள் பெரும் கூட்டத்துடன் ஓடிய படம். மொத்தம் ரூ 18 ஆயிரம் கோடிகளைக் குவித்து உலகில் இன்றுவரை முதலிடத்தில் நிற்கிறது. அதாவது பாகுபலி 2 ஐ விட 18 மடங்கு வசூல்!


இதற்கு அடுத்த இடத்தில் உள்ள படம் இதே இயக்குநர் அதற்கு முன்பு இயக்கிய டைட்டானிக். 11 ஆயிரம் அரங்குகளில் வெளியான அந்தப் படம் 14200 கோடிகளைக் குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.


Will an Indian film really beat Avatar in future?

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ஸ்பைடர்மேன், ஜூராசிக் பார்க் வகை படங்கள் எல்லாமே இந்த இரண்டு படங்களுக்கும் அடுத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்... இந்தியப் படங்கள் அவதாரை மிஞ்சுவது எப்போது நடக்கும் என்று!

English summary
Will Indian movies beat Avatar in near future? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil