Don't Miss!
- News
தேநீர் விருந்து.. தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.. திமுக முடிவு என்ன?
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Avatar 2 Box Office Prediction: முதல் நாளிலேயே இந்தியாவில் 50 கோடி.. உலகளவில் இத்தனை ஆயிரம் கோடியா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி அனைவரையும் எப்படா தியேட்டருக்குப் போய் அந்த படத்தை பார்ப்போம் என நினைக்க வைத்துள்ளது.
பல கோடி மக்கள் ஏற்கனவே அட்வான்ஸாக டிக்கெட் புக் செய்து முதல் நாளிலேயே படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் அட்வான்ஸ் புக்கிங்கே 20 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை அவதார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Avatar
2
Review:
ஜேம்ஸ்
கேமரூனின்
ப்ளூ
மேஜிக்
மீண்டும்
கை
கொடுத்ததா?
அவதார்
2
விமர்சனம்!

அவதார் பட்ஜெட் எவ்வளவு
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் முதல் பாகமே உலகம் முழுவதும் 25000 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. அவதார் 2 திரைப்படம் அதை விட பெரியளவில் வசூல் செய்ய பணத்தை தண்ணியாக செலவு செய்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். 2500 கோடி பட்ஜெட்டில் அவதார் 2 திரைப்படம் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3ம் பாகம் முதல் 5ம் பாகம் வரை அவர் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாசிட்டிவ் விமர்சனம்
இந்த ஆண்டு ஹாலிவுட்டில் பல கோடி செலவில் வெளியான தோர், பேட்மேன் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள அவதார் திரைப்படம் சிம்பிளான கதையை வைத்துக் கொண்டு சூப்பரான விஷுவல் மேஜிக் திரைக்கதையை வடிவமைத்து ரசிகர்கள் வாயில் வாட்டர் ஃபால்ஸ் வரும் அளவுக்கு தி வே ஆஃப் வாட்டர் படத்தை பார்த்து வருவதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

50 கோடி கன்ஃபார்ம்
இந்தியாவில் அவதார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வட இந்தியாவில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு டிக்கெட்டுக்கு அதிகபட்சம் 2500 ரூபாய் எல்லாம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே 20 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட நிலையில், நேரடியாக தியேட்டருக்கு சென்று இந்தியா முழுக்க பார்க்கும் ரசிகர்களால் நிச்சயம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் 1000 கோடி
சீனாவில் மட்டும் அவதார் திரைப்படம் அதிகபட்சமாக முதல் நாளில் 120 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பின் படி சுமார் 950 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிக திரையரங்குகள் உள்ள நிலையில், பல ஆயிரம் தியேட்டர்களில் அவதார் படத்தை அங்கு ஜேம்ஸ் கேமரூன் இறக்கி உள்ளார்.

3000 கோடி டார்கெட்
அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அவதார் 2 படத்தை வெளியிட்டுள்ள ஜேம்ஸ் கேமரூன் முதல் நாளிலேயே 3000 கோடி வசூல் டார்கெட் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2000 கோடிக்கும் மேல் படம் நிச்சயம் வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார் 3
மேலும், அவதார் 3ம் பாகத்துக்காக சுமார் 9 மணி நேர படத்தை அப்படியே விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்ய டிஸ்னி நிறுவனத்துக்கு கொடுத்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன் என்கிற தகவலும் டிரெண்டாகி வருகிறது. அவதார் 2 படமே 3 மணி நேரம் 10 நிமிடம் ஓடும் நிலையில், 9 மணி நேரத்துக்கு VFX செய்து ஓடிடியில் வெளியிட திட்டமா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.