For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ.. பிக் பாஸ் தமிழ் 4 போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் இருந்தே, காதல் லீலைகள் செமையா களைகட்டியது. ஆனால், 4வது சீசனில் இன்னமும் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை.

  ஆரம்பித்து 10 நாட்கள் தானே ஆகிறது. இப்போதானே மோதல்கள் ஸ்டார்ட் பண்ணியிருக்கு அப்புறம் காதல் மலரும் என்றும் பிக் பாஸ் தீவிர ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  இந்த ஆண்டின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட்டும் அதுவாகத் தான் இருக்கும் என்றே தெரிகிறது.

  அடுத்த டாஸ்க்காம்... ஜோடி ஜோடியாய் சேர்த்துவிட்ட பிக்பாஸ்.. என்னல்லாம் நடக்க போகுதோ!

  மருத்துவ முத்தம்

  மருத்துவ முத்தம்

  பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் நடிகை ஓவியாவுக்கும், ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்தது. ரொமான்டிக்காக கொடுத்த முத்தத்திற்கு மருத்துவ முத்தம் என புதுப்பெயரை வைத்து முதல் சீசனை செம சூப்பராக ஓட்டினர். ஆரவ் ஓவியா காதல் மட்டுமின்றி ரைசா வில்சன் ஹரிஷ் கல்யாண் காதல் டிராக்கும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

  ஐஸ்வர்யா தத்தா – ஷாரிக் காதல்

  ஐஸ்வர்யா தத்தா – ஷாரிக் காதல்

  முதல் சீசனை தொடர்ந்து இரண்டாம் சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் இளம் காதல் ஜோடிகளின் கூத்துக்களுடன் நல்லாவே போனது. ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக் கான் இடையே ஏற்பட்ட காதல் மற்றும் யாஷிகா ஆனந்த், மகத் காதல் என இரண்டாம் சீசனும் ரொமான்ட்டிக் மோடிலே சென்றது.

  கவிலியா

  கவிலியா

  எல்லாத்தையும் விட மூன்றாவது சீசனில் நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா இடையே ஏற்பட்ட காதல் தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஹைலைட்டே. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் எப்போ கல்யாணம் நடக்கும் என்கிற ரேஞ்சுக்கு பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இருவரும் படங்களில் படு பிசியாக நடித்து வருகின்றனர்.

  எல்லாமே நடிப்பு தான் பாஸ்

  எல்லாமே நடிப்பு தான் பாஸ்

  பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒரு டிவி சீரியல் போலத்தான். ஓவியா, ஆரவ் உருகி உருகி லவ் பண்ண நிலையில், ஆரவ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மகத்தும் யாஷிகாவை விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கவின், லாஸ்லியாவின் காதலும் அது போலத் தான்.

  அன் ரியாலிட்டி

  அன் ரியாலிட்டி

  அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மோதல் வெடித்த நிலையில், இப்போது பார்த்தால், இருவரும் சின்ன மச்சான், பெரிய மச்சான் பாட்டுக்கு ஜோடி போட்டு ஆடுறாங்க, பிக் பாஸ் நிகழ்ச்சியே செமி ஸ்க்ரிப்டட் என்பதால், இது போன்ற அன் ரியாலிட்டிகளை சகித்துக் கொண்டு தான் ரசிகர்கள் ரசித்தாக வேண்டும்.

  இந்த சீசனில் யாருக்கும் யாருக்கும்

  இந்த சீசனில் யாருக்கும் யாருக்கும்

  கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டிக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் தான் ஆரம்பத்தில் இருந்தே மோதல் ஏற்பட்டு வருகிறது. டுபாக்கூர் என ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட நிலையில், இந்த இருவருக்கும் சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் காதல் மலர அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

  பாகுபலி என கொஞ்சிய சனம்

  பாகுபலி என கொஞ்சிய சனம்

  சனம் ஷெட்டியும், பாலாஜி முருகதாஸும் மாடலிங் துறையை சேர்ந்தவர்கள். பாலாஜி முருகதாஸ் என்ட்ரி கொடுத்ததில் இருந்தே, சனம் ஷெட்டி அவரை ஹக் பண்ணி, பாகுபலி என செல்லப் பெயர் எல்லாம் வைத்து கொஞ்சினார். பின்னர் தான் இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது. மீண்டும் இருவருக்குள்ளும் இந்த சீசனில் காதல் மலர அதிக வாய்ப்புகள் உள்ளன.

  கல்யாணமானவர்கள்

  கல்யாணமானவர்கள்

  இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் திருமணமானவர்கள் என்பதால், இருக்கும் கொஞ்ச சிங்கிள்களை வைத்தே மிங்கிள் பண்ணி இனி வரும் எபிசோடுகளை கொஞ்சம் ரொமான்ட்டிக் ரசம் சேர்த்து பிக் பாஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவானி, சோமசேகர், ரம்யா பாண்டியன், ஆஜீத், கேப்ரில்லா இடையேயும் லவ் ஸ்டோரி உருவாகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Bigg Boss Tamil 4 fans expecting a love track in this house soon. And they wants romantic scenes with Balaji Murugadoss and Sanam Shetty.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X