»   »  பிக் பாஸ் பரிசுப் பணம்: ஆரவ், சொன்னீங்களே செய்வீங்களா?

பிக் பாஸ் பரிசுப் பணம்: ஆரவ், சொன்னீங்களே செய்வீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் பரிசுத் தொகையை வைத்து தான் செய்யப் போவதாக சொன்னதை ஆரவ் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த அறிவிப்பை நள்ளிரவில் வெளியிட்டார்கள். ஆரவுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

வரி பிடித்தம் போக ஆரவுக்கு ரூ. 36 லட்சம் கிடைத்துள்ளது.

ஆரவ்

ஆரவ்

பிக் பாஸ் டைட்டிலை ஜெயித்தால் என்ன செய்வீர்கள் என்று போட்டியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட்கப்பட்டது. அப்போது ஆரவ் கூறியதாவது, பிக்பாஸ் வெற்றியில் கிடைத்த பணத்தை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தான் செலவு செய்வேன் என்றார்.

வெற்றி

வெற்றி

ஆரவ் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்று பரிசுத்தொகையை பெற்றுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி அந்த பணத்தை விவசாயிகளுக்காக செலவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்த்து

வாழ்த்து

பிக் பாஸ் டைட்டில் வென்ற ஆரவுக்கு கோலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியா ஆர்மிக்காரர்கள் கூட ஆரவை வாழ்த்தியுள்ளனர்.

படங்கள்

படங்கள்

படங்களில் ஹீரோவாக பார்க்க விரும்புவதாக ஆரவிடம் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள் ஆரவ் ரசிகர்கள்.

English summary
Will Bigg Boss title winner Aarav do what he promised while he was there in the BB house?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil