twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடக்குமா? ஒமிக்ரான் பரவல் அதுக்கும் வேட்டு வைக்குமா?

    |

    சென்னை: ஒமிக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகள் 50 சதவீதம் மட்டுமே இயங்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

    பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சீசனை போல பிரம்மாண்டமாக பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே நடக்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    பிக்பாசிற்கு பிறகு சஞ்சீவ் போட்ட முதல் ட்வீட்...என்ன சொல்லிருக்கார் தெரியுமா ? பிக்பாசிற்கு பிறகு சஞ்சீவ் போட்ட முதல் ட்வீட்...என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?

    பொங்கல் கலை விழாக்கள் ஒத்திவைப்பு

    பொங்கல் கலை விழாக்கள் ஒத்திவைப்பு

    அரசு மற்றும் தனியார் அமைப்புகள் இந்த ஆண்டு பொங்கல் கலை விழாக்கள் ஒத்தி வைக்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ள பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி எப்படி நடக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    கிராண்ட் ஃபினாலே நடக்குமா

    கிராண்ட் ஃபினாலே நடக்குமா

    ஒமிக்ரான் வைரஸ் காட்டுத் தீ போல நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், பெரிய விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வரும் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை எப்படி நடக்கப் போகிறது என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். சிறப்பு கெஸ்ட்டுகள் மற்றும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பங்கு பெறுவதிலும் சிக்கல் உருவாகுமா? என்று சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

    பலத்த பாதுகாப்பு

    பலத்த பாதுகாப்பு

    பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவின் படப்பிடிப்பு சனிக்கிழமையே முடிந்து விடும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் பெரிய பிரச்சனையாக இருக்காது என்றும் பலத்த பாதுகாப்புடன் நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ரசிகர்களுக்கான அனுமதி மட்டும் இந்த முறை மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் அறிவித்ததை போல சனி மற்றும் ஞாயிறு என லாக்டவுன் இங்கேயும் போட்டால் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நடத்துவதில் பெரிய சிக்கலே உண்டாகி விடும்.

    மிஸ் ஆனா சிக்கல்

    மிஸ் ஆனா சிக்கல்

    இந்த ஆண்டு துவக்கத்தில் இதே இவிபி பிலிம் சிட்டியில் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சியில் சில போட்டியாளர்களுக்கு கொரோனா பரவிய நிலையில், அதிகாரிகள் அதிரடியாக அந்த ஸ்டூடியோவுக்கு சீல் வைத்தனர். அது போல எதுவும் நடக்கக் கூடாது என்பதில் பிக் பாஸ் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    Recommended Video

    Bigg Boss Tamil Season 5 | 5th January 2022 - Promo 3 | உப்புக்கும் தில்லுக்கும் என்னடா சம்மந்தம்??
    ரசிகர்கள் கவலை

    ரசிகர்கள் கவலை

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவை நோக்கி ஏகப்பட்ட போட்டியாளர்களின் ஆர்மியினர் பெரும் கனவுடன் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கு பிக் பாஸ் போல ஏகப்பட்ட திரை பிரபலங்கள் பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலேவிலும் பங்கு பெற வேண்டும் என நினைத்த நிலையில், கடைசியில் அகம் டிவி வழியே டைட்டில் வின்னரை அறிவித்து விடப் போகிறார்கள் என ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் டிக்கெட் டு ஃபினாலே கூட அப்படித் தான் அமீருக்கு வழங்கப்பட்டது.

    English summary
    Rapid raise of Omicron cases pushes several lockdowns in the state. So many Bigg Boss fans raise doubts about how Bigg Boss Tamil 5 grand finale will happen in the crisis time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X