இன்று ஏகே 61 ஃபர்ஸ்ட்லுக் வருமா....காத்திருக்கும் ரசிகர்கள்...நல்ல வார்த்தை சொல்வாரா போனி கபூர் ?

சென்னை : அஜித்தின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் ஏகே 61 படம் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வெளியிடுவார்களா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு தயாரிப்பாளர் போனி கபூர் தான் பதில் சொல்ல வேண்டும்.

அஜித்தின் 51வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிவி சேனல்களும், வெறும் தின சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் அஜித் பர்த் டே ஸ்பெஷல் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றன.

விறுவிறுப்பாக ஏகே 61 ஷுட்டிங்

விறுவிறுப்பாக ஏகே 61 ஷுட்டிங்

ஆனால் அஜித் தற்போது ஏகே 61 ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோ - வில்லன் என அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இது வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என்றும் சொல்கிறார்கள். அதே சமயம், அஜித் வயதான காலேஜ் ப்ரொஃபோசர் ரோலில் நடிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

ஏகே 61, ரஜினி பட கதையா

ஏகே 61, ரஜினி பட கதையா

காலேஜ் ப்ரொஃபோசருக்கும் வங்கிக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு, கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஒரு புறம் குழம்பிப் போய் இருக்க, மற்றொரு புறம் இது ரஜினி நடித்த நான் சிவப்பு மனிதன் கதை போலவே இருக்கிறதே. அதில் தான் காலேஜ் ப்ரொஃபசராக இருக்கும் ரஜினி, ராபின் ஹுட் என்ற பெயரில் வில்லன்களை பழிவாங்குவார் என்று மற்றொரு கூட்டம் வதந்திகளை கிளப்பி விட்டுக் கொண்டுள்ளது.

ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவாரா

ஃபர்ஸ்ட்லுக் வெளியிடுவாரா

இதற்கிடையில் அஜித்தின் பிறந்தநாளான இன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுட் அல்லது டைட்டில் ஏதாவது ஒன்றை போனி கபூர் வெளியிடுவார் என தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் வழக்கம் போல் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், வழக்கம் போல் போனி கபூர் தற்போது வரை அமைதி காத்து வருகிறார். அஜித் பிறந்தநாளுக்காக ஒரு வாழ்த்து கூட சோஷியல் மீடியாவில் அவர் பதிவிடவில்லை. மாறாக ஜீ தமிழ் சேனலில் இன்று வலிமை படம் ஒளிபரப்பாகிறது என்றபதை மட்டும் ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

Ajith Birthday-க்கு பிரபலங்கள் வாழ்த்து | Ajith 51'st Birthday | Filmibeat Tamil
போனி கபூருக்கு நெட்டிசன்கள் எச்சரிக்கை

போனி கபூருக்கு நெட்டிசன்கள் எச்சரிக்கை

கடந்த ஆண்டும் அஜித்தின் பிறந்தநாளன்று வலிமை ஸ்டில்ஸ், வலிமை அப்டேட் வெளியிட உள்ளதாக அவரே அறிவித்தார். ஆனால் கடைசி நேரத்தில், கொரோனாவால் மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என அஜித் கூறி விட்டதாக சொல்லி, காக்க வைத்து ஏமாற்றி விட்டார். இதனால் இந்த ஆண்டு அஜித் பிறந்தநாளுக்கும் ரசிகர்களை காக்க வைத்து, ஏமாற்ற வேண்டாம். ரசிகர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என நெட்டிசன்கள் போனி கபூரை மறைமுகமாக எச்சரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X