இன்று ஏகே 61 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவாரா போனி கபூர் ?...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டியில் ஒரு மாதத்திற்குள் மேலாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதன் பிறகு ஜுன் மாதத்தில் புனேயில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதற்குள் அஜித் ஃபாரின் டூர் புறப்பட்டு சென்றார். இந்த கேப்பில் அஜித் தவிர மற்ற நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை டைரக்டர் வினோத் எடுத்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து பிஸியாகும் அஜித்

அடுத்தடுத்து பிஸியாகும் அஜித்

அஜித், இந்தியா திரும்பியதும் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்று பார்த்தால் அவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி, போட்டி என சென்று விட்டார்.இதற்கிடையில் சென்னையில் எடுக்கப்பட்ட சில ஸ்டன்ட் சீன்களால் அஜித் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என அவர் பார்க்க கூட்டம் கூடிய வீடியோக்கள் வெளியாகின. ஹெச்.வினோத்தும் வடசென்னையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பாகின.

ஏகே 61 அடுத்தகட்ட ஷுட்டிங்

ஏகே 61 அடுத்தகட்ட ஷுட்டிங்

லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் அடுத்த வாரம் சென்னையில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.செப்டம்பர் மாதத்திற்குள் ஷுட்டிங்கை முடித்து, ஏகே 61 படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு அப்டேட் கூட இல்லையே

ஒரு அப்டேட் கூட இல்லையே

ஆனால் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது முதல் இதுவரை ஒரு அப்டேட்டை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. கடைசியாக ஷுட்டிங் துவங்குவதற்கு முன் அஜித்தின் பிளாக் அன்ட் ஒயிட் நெகடிவ் இமேஜ் ஒன்றை மட்டும் ட்விட்டரில் பகிர்ந்தார். இதனால் படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மை தானா என போனி கபூர் ஏதும் சொல்லவில்லை.

இன்று ஏகே 61 டைட்டில் வருமா?

இன்று ஏகே 61 டைட்டில் வருமா?

இந்நிலையில் மறைந்த தனது காதல் மனைவி ஸ்ரீதேவியின் நினைவு நாளில் வலிமை படத்தை ரிலீஸ் செய்தது போல், ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக பல மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13 ம் தேதியான இன்று ஏகே 61 படத்தில் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போன்ற ஏதாவது அப்டேட் வருமா என ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஏகே 61 டைட்டில் இது தானா?

ஏகே 61 டைட்டில் இது தானா?

இதற்கிடையில் மற்றொரு தகவலாக ஏகே 61 படத்திற்கு 'வல்லமை' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அஜித் மற்றும் போனி கபூரின் 'வி' சென்டிமென்ட் காரணமாக சொல்லப்பட்டாலும் வலிமை - வல்லமை இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் ரசிகர்கள் அதை விரும்புவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் இருக்கக் கூடும் என ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X