»   »  ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்

ரஜினி செய்த அதே காரியத்தை செய்வாரா சிரஞ்சீவி?: காத்திருக்கும் டோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சிரஞ்சீவியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அரசியலில் பிசியாக இருந்த சிரஞ்சீவி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான கைதி எண் 150 சூப்பர் ஹிட்டானது.

இது விஜய் நடிதத் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

அனுஷ்கா

அனுஷ்கா


கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பாகுபலி 2, சிங்கம் 3 என்று படுபிசியாக இருந்ததால் சிருவுக்கு டேட்ஸ் கொடுக்க முடியவில்லை.

காஜல்

காஜல்

அனுஷ்கா நடிக்க மறுத்ததை அடுத்தே காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார்கள். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரித்தார். இந்நிலையில் ராம் சரண் மீண்டும் தனது தந்தையை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

ராம் சரண் சிரஞ்சீவியை வைத்து தயாரிக்கும் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறாராம். இந்த படத்தில் சிருவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

சுரேந்தர் ரெட்டிக்கு சிரஞ்சீவி ஜோடியாக ஸ்ருதி ஹாஸனை நடிக்க வைக்க ஆசையாம். ஆனால் ஸ்ருதி சிரஞ்சீவிக்கு ஜோடியாக அல்ல மகள் போன்று இருப்பாரே என்கிறது தெலுங்கு திரையுலகம். ஸ்ருதி ராம் சரண் மற்றும் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுடன் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெட்கம்

வெட்கம்

மகள் வயதில் இருக்கும் காஜலுடன் எப்படி காதல் காட்சிகளில் நடிப்பது என்று தயங்கினார் சிரஞ்சீவி. அப்படி இருக்கும்போது நண்பர் கமல் ஹாஸனின் மகளுடன் காதல் காட்சிகளில் நடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Buzz is that Anushka or Shruti Haasan will pair up with Mega star Chiranjeevi in his upcoming movie to be directed by Surender Reddy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil