சியான் விக்ரமின் கோப்ரா.. இந்த தேதியில் தான் ரிலீஸா? வெளியான ஹாட் அப்டேட்!
சென்னை: சியான் விக்ரம் விதவிதமான கெட்டப்புகளை போட்டு மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள கோப்ரா படம் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக ஹேப்பி நியூஸ் கிடைத்திருக்கிறது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவின் திறமையான இயக்குநர் வரிசையில் முன்னேறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் படு மாஸான அறிவிப்புகளுடன் உருவானது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக வெளிநாடு ஷூட்டிங் தடைபட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் கிடப்பில் போடப்பட்டது.

விக்ரமின் கோப்ரா
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீனிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீசுக்காக விக்ரம் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர். படத்தின் அட்டகாசமான டீசர் வெளியானதில் இருந்தே அத்தனை கெட்டப்புகளில் விக்ரமை காண பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.

அடுத்தடுத்த ரிலீஸ்
சியான் விக்ரமுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அமேசான் பிரைமில் வெளியான மகான் திரைப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நடிப்பு விருந்தாக அமைந்தது. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் படமும் வெளியாகிறது. அதற்கு முன்னதாகவே கோப்ரா படமும் வெளியாகும் என்கிற ஹாட் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

ஹிட்டான அதீரா
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோப்ரா படத்தில் இடம்பெற்ற தும்பி துள்ளல் பாடல் ஏற்கனவே ஹிட்டான நிலையில், சமீபத்தில் வெளியான ஓப்பனிங் பாடலான அதீரா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது. கணக்கு வாத்தியாராகவும் கடத்தல் மன்னனாகவும் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் விக்ரம் வழக்கம் போல உடம்பை உருக்கி நடித்திருக்கிறார்.

கோப்ரா ரிலீஸ் தேதி
சியான் விக்ரம் மற்றும் கேஜிஎஃப் நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியாகும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











