»   »  டங்காமாரியை தூக்கி சாப்பிடுமா ‘டண்டனக்கா’?

டங்காமாரியை தூக்கி சாப்பிடுமா ‘டண்டனக்கா’?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் தான், ‘டங்காமாரி'. ரசிகர்களிடையே இப்பாடலுக்கு செம வரவேற்பு. இந்த அளவுக்கு "வரலாற்றுச் சிறப்புவாய்ந்த" இந்த வெற்றிப் பாடலை எழுதியவர் ரோகேஷ்.

முதல் பாடலிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலமான ரோகேஷ், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் "ரோமியோ ஜூலியட்". கதை, திரைக்கதை எழுதி லக்ஷ்மன் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பாஜ்வா நடித்துள்ளனர்.

[ரோமியோ ஜூலியட் படங்கள்]

இது தவிர வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

டங்காமாரி புகழ்...

டங்காமாரி புகழ்...

இப்படத்தில் டங்காமாரி புகழ் ரோகேஷ் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இமான் இசையில் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார்.

டண்டனக்கா...

டண்டனக்கா...

‘டண்டனக்கா...' எனத் தொடங்கும் இப்பாடல், ‘எங்க தல எங்க தல டீ ஆரு, சென்டிமென்ட்டுல தார்மாறு, மைதிலி என்னை காதலி"ன்னாரு, அவரு உண்மையா, லவ் பண்ண சொன்னாரு, மச்சான் - அங்க தான்டா, எங்க தல நின்னாரு" எனத் தொடர்கிறது.

செல்லப்பாடலாகும்...

செல்லப்பாடலாகும்...

இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் லக்ஷ்மன் கூறுகையில், ‘இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இப்பாடல் அமையும் என்பதில் ஐயமில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும்" என்கிறார்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கமாரி பாடலைப் போன்றே இப்பாடலும் பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரும் என ரோமியோ ஜூலியட் படக்குழு நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

English summary
The danga mari super hit song lyrics writer Rokesh has written a new song for a upcoming movie. The response for danga mari has created a expectation for hid next song ‘dandanaka’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil