»   »  நயன் என் தோழி, அவர் திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்: சிம்பு

நயன் என் தோழி, அவர் திருமணத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா அழைத்தால் நிச்சயம் அவரது திருமண விழாவில் கலந்து கொள்வேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் சிம்புவும், நயன்தாராவும் தீவிரமாக காதலித்தார்கள். அதன் பிறகு பிரிந்து ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர். பல ஆண்டுகள் கழித்து பாண்டிராஜின் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தில் நடித்தனர்.

Will definitely attend Nayanthara's wedding: Simbu

நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலி. சிம்பு வாழ்வில் வந்த ஹன்சிகா வந்த வேகத்திலேயே சென்றுவிட்டதால் அவர் சிங்கிளாகத் தான் உள்ளார்.

நயன்தாராவும், விக்கியும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே லிவ் இன் முறைப்படி வாழ்வதாக கோடம்பாக்கம் எல்லாம் பேச்சு.

இந்நிலையில் நயன்தாரா, விக்கியின் திருமணத்தில் கலந்து கொள்வீர்களா என்று சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

நயன்தாராவும் சரி, விக்னேஷ் சிவனும் சரி எனக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் அழைத்தால் நிச்சயம் திருமணத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

English summary
Simbu said that he will definitely attend his former girl friend Nayanthara's wedding if she invites him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil