twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி குடும்பத்தை பிரிவது தனுஷுக்கு பாதிப்பை தருமா?...

    |

    தனுஷ் என்கிற மனிதன், ரஜினியின் மருமகன் என அறியப்பட்ட பின்னரே அவருக்கு வாழ்வில் ஏற்றம் கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தனுஷின் திறமைக்கு கூடுதல் மெருகை தந்தது ரஜினியின் குடும்பப்பிள்ளை என்கிற அந்தஸ்த்தே, தற்போது அதிலிருந்து விடுபடும் தனுஷுக்கு எதிர்கால திரையுலக வாழ்க்கை ஏற்றம் தருமா? அவர் திறமையை நம்பியே இனி நகரும் நிலை ஏற்படும் என்பதால் அவரது எதிர்கால திரையுலக வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்ப்போம்.

    தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி... ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி... ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்

    ஆகச்சிறந்த திறமைச்சாலி தனுஷ்

    ஆகச்சிறந்த திறமைச்சாலி தனுஷ்

    நடிகர் தனுஷ் ஆகப்பெரிய திறமைசாலி, மிகப்பெரிய பாத்திரத்தை அனாயசியமாக ஊதித்தள்ளிவிடும் நடிகர். இந்தி படங்கள், ஆங்கிலப்படம் என்பதைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் கால் பதித்துவிட்டார். இவ்வளவு தூர பயணம், வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை தனுஷுக்கு. அவரது திறமை முக்கிய காரணம். ஆனால் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடியில் நடித்த தனுஷின் சாதாரண காலக்கட்டத்தை திரும்பிப் பார்த்தால் ஏதோ ஒன்று அவரை இந்த இடத்திற்கு தூக்கி வந்துள்ளது எனலாம். அதில் ரஜினி எனும் இமேஜுக்கு பங்கிருப்பதை தனுஷும் மறுக்க மாட்டார்.

    போலித்தனங்களால் நிறைந்த திரையுலகம்

    போலித்தனங்களால் நிறைந்த திரையுலகம்

    திரையுலகம் விசித்திரமான ஒன்று. அங்கு முதலில் இருப்பது அடிமைத்தனம், ஏமாற்றுத்தனம், போலி புகழ்ச்சிகளே அதிகம். அதை தவறென்று சொல்ல முடியாது. காரணம் பலகோடி போட்டு புழங்கும் இடத்தில் இதுபோன்ற விஷயங்கள் சாதாரண்மாக இருக்கும். பணிவு அதீத பணிவு இல்லாவிட்டால் திமிர் பிடித்தவன் என்கிற முத்திரை விழுந்துவிடும், அதே நேரம் வென்றவர் தலைக்கனத்துடன் நடந்தால் அதையும் சரி என்று புகழும் உலகம் தான் சினிமா உலகம்.

    தனுஷ் எனும் நாயகன்

    தனுஷ் எனும் நாயகன்

    அடுத்து சினிமா உலகில் அதிகம் காணப்படுவது என்னதான் சிறப்பாக நடித்தாலும் சினிமாவில் முன்னுக்கு வருவது புரியாத புதிரான ஒன்று. நூறுபேர் வந்தால் 5 பேர் வெல்வது கடினம். 5 பேர் வெற்றியை பற்றியே பேசுவதால் விட்டில் பூச்சிபோல் மீண்டும் மீண்டும் மோதி அழிபவர்களே அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நடிக்க வந்தார் தனுஷ். சிறுவர்கள் நடிக்கும் படம் என்பதால் துள்ளுவதோ இளமையில் நடித்தார். அவரை பாராட்டியதை விட விமர்சித்தவர்களே அதிகம்.

    பத்தோடு பதினொன்றாக தனுஷ்

    பத்தோடு பதினொன்றாக தனுஷ்

    அடுத்து காதல் கொண்டேன், சுள்ளான் போன்ற படங்கள் நடித்தார். பத்தோடு பதினொன்றாக நடிகராக இருந்தார். இந்நிலையில் அதே ஆண்டில் அவருக்கு திருமணமானது. மிகப்பெரிய நடிகர் வீட்டு மருமகன் என்கிற அந்தஸ்து ஒரே நாளில் தனுஷுக்கு கிடைத்தது. முதல்வர் ஜெயலலிதா கையால் தாலிவாங்கி திருமணம், கருணாநிதி கலந்துக்கொண்ட திருமணம் என மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் வாழ்க்கை தொடங்கியது.

    இண்டஸ்ட்ரியில் கூடிய மரியாதை

    இண்டஸ்ட்ரியில் கூடிய மரியாதை

    இண்டஸ்ட்ரியிலும் மரியாதை கூடியது, பத்தோடு பதினொன்றாக தனுஷை பார்க்காமல் பெரிய இடத்து பிள்ளையாக பார்த்தார்கள் (இது சினிமாவில் மிக முக்கியமான ஒன்று) மறு ஆண்டில் 2005 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் தேவதையைக்கண்டேன் பி கிளாஸ் ரசிகர்களின் எணிக்கையை கூட்டியது. அதன் பின்னர் தனுஷும் படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு தனுஷுக்கு முக்கியமான காலக்கட்டம். தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதை காட்டும் விதமாக அவரது அண்ணன் செல்வராகவன் டைரக்‌ஷனில் வெளியான 'புதுப்பேட்டை' படம் நிரூபித்தது.

    யார் இந்த தனுஷ் இந்தியாவே கேட்ட கேள்வி

    யார் இந்த தனுஷ் இந்தியாவே கேட்ட கேள்வி

    இப்படத்தில் துணை இயக்குநராக இருந்தவர்தான் வெற்றிமாறன் இதன்மூலம் வெற்றிமாறனின் தொடர்பும் தனுஷுக்கு கிடைத்தது. இது இருவர் வாழ்க்கையையும் மாற்றிப்போட்டது. பொல்லாதவன் படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி பெரும்வெற்றி பெற்றது. தனுஷ் ஆக்‌ஷன் ஹீரோவானார். தொடர்ந்து யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம் என வெற்றியை சுவைத்தார் தனுஷ். யார் இந்த தனுஷ் என தமிழ் திரையுலகம் தாண்டி பாலிவுட், டோலிவுட்டில் கேள்வி எழுந்தது. ரஜினியின் மருமகன் என்கிற அடையாளம் அப்போது அவருக்கு உதவியது.

    விருதுமேல் விருது பெற்ற தனுஷ்

    விருதுமேல் விருது பெற்ற தனுஷ்

    ஆடுகளம் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதையும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத்தந்தது. தனுஷ் திரையுலகில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். தொடர்ந்து மாமனார் நடித்து வெற்றிப்பெற்ற மாப்பிள்ளை பட பாணியில் மாப்பிள்ளை படத்தில் நடித்தார், அடுத்து ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் 3 என்கிற படத்தில் நடித்தார்.

    அசுர வேக வளர்ச்சியடைந்த தனுஷ்

    அசுர வேக வளர்ச்சியடைந்த தனுஷ்

    மரியான், அண்ணன் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி பெருவெற்றி பெற்று தனுஷை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுச் சேர்த்தது. அதன் பின்னர் தனுஷின் வேகம் ராக்கெட் வேகம்தான். மாரி, கொடி என வெற்றிப்படங்கள் வர 2018 ஆம் ஆண்டு The Extraordinary Journey of the Fakir என்கிற ஆங்கிலப்படத்திலும் நடித்தார். தொடர்ந்து தொடர்ந்து அசுரன், கர்ணன் என வெற்றி மாறன், மாரி செல்வராஜ் கூட்டணி தனுஷை திரும்பிப்பார்க்க வைத்தது.

    ரஜினி எனும் கேடயம்

    ரஜினி எனும் கேடயம்

    இந்தப்படங்கள் ஜெய்பீம் போல் சமுதாயத்தில் உள்ள மோசமான விஷயங்களை படம் போட்டு காட்டினாலும் தனுஷுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு வராமல் கேடயமாக அமைந்தது ரஜினி எனும் பிம்பம். அசுரன் படம் மீண்டும் அவருக்கு தேசியவிருதை பெற்றுத் தந்தது. இந்த ஆண்டு அவரது இந்திப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. அடுத்து அவெஞ்ச்ர்ஸ் படத்தயாரிப்பாளர்களின் ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அசுர வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டிப்பிடித்ததில் தனுஷின் திறமை உள்ளதை மறுக்க முடியாது. ஆனால் ரஜினி குடும்பம், ரஜினி பிம்பம் உள்ளதையும் மறுக்க முடியாது.

    காலா...உதவிய ரஜினி

    காலா...உதவிய ரஜினி

    இடையில் தனுஷ் பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கினார். சில படங்களை எடுத்ததில் நஷ்டமடைந்ததாக கூறப்பட்டது, இதற்காக தனுஷின் கடனை அடைக்க ரஜினி காலா என்கிற படத்தை நடித்துக்கொடுத்து மீட்டெடுக்க உதவினார் என்ற பேச்சும் உண்டு, இது சாதாரண நடிகருக்கு கிடைத்திருக்காது. கடனிலிருந்து மீள மேலும் கடன் என சிரமப்பட்டிருப்பார்.

    ரஜினி குடும்பத்து பிள்ளை இல்லை...தனுஷை பாதிக்குமா?

    ரஜினி குடும்பத்து பிள்ளை இல்லை...தனுஷை பாதிக்குமா?

    ரஜினி குடும்ப மருமகன் இனி இல்லை என்பது தனுஷின் திரையுலக வாழ்க்கையை பாதிக்குமா? என்றால் இரண்டுவிதமாக கூறலாம். பாதிக்கும், பாதிக்காமலும் போகலாம். காரணம் தனுஷ் மிகச்சிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர். அனைத்து வித்தைகளையும் கற்றவர். தனித்துவமிக்க அவரது திறமையும் அவர் இந்த இடத்துக்கு வர காரணமாக அமைந்துள்ளது. ஆகவே அது அவரை பாதிக்காது எனலாம்.

    Recommended Video

    Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
    எடுத்து வைக்கும் அடியை யோசித்துதான் எடுத்து வைக்க வேண்டும்

    எடுத்து வைக்கும் அடியை யோசித்துதான் எடுத்து வைக்க வேண்டும்

    அதே நேரம் சினிமா உலகம் வேறு மாதிரி. இனி தனுஷை தனியாளாகத்தான் பார்க்கும். அவரது இடர்பாடான காலங்களில் சற்றும் கவலைப்படாமல் அணுகுவார்கள். அதையெல்லாம் இனி தனுஷ் தனியாளாகத்தான் அணுகவேண்டும். ஏனென்றால் ஓராயிரம் திறமைமிக்க தனுஷ்கள் உள்ள சினிமா உலகம் இது. அவர் இனி எடுத்து வைக்கும் அடியை சற்று யோசித்துத்தான் எடுத்து வைக்க வேண்டும். ஏனென்றால் கைதூக்கிவிட ரஜினி எனும் மிகப்பெரிய புல்டோசர் அங்கு இருக்காது.

    English summary
    Will Dhanush Career Affect After the Split With Rajinikanth family?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X