twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன இப்படி ஆகிடுச்சே கர்ணா? ஏப்ரல் 10 முதல் தியேட்டரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!

    |

    சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

    நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு காரணமாக படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

    மினி லாக்டவுன்

    மினி லாக்டவுன்

    நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. மகராஷ்ட்ராவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க மினி லாக்டவுன் போன்ற ஒன்றை போடும் முடிவில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    50 சதவீதம் மட்டுமே அனுமதி

    50 சதவீதம் மட்டுமே அனுமதி

    கடந்த மார்ச் மாதம் மத்தியில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் காலவரையின்றி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. தீபாவளியை முன்னிட்டு மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்கள் 50 சதவீதம் இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டன. பிப்ரவரி மாதத்தில் தான் தியேட்டர்கள் மீண்டும் 100 சதவீதம் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் 50 சதவீத இருக்கைகளுடனே தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தப்பித்த சுல்தான்

    தப்பித்த சுல்தான்

    கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் ஒரே வாரத்தில் அமோக வசூலை குவித்து வெற்றி விழவையும் கொண்டாடியது. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கிட்டத்தட்ட இரு வாரங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் திரையிடப்பட்டு தப்பித்து விட்டது.

    சிக்கிய கர்ணன்

    சிக்கிய கர்ணன்

    நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் நாளை ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இந்த படத்திற்கு உள்ள நிலையில், முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன. ஆனால், தற்போது அதிரடியாக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு காரணமாக மிகப்பெரிய சிக்கலில் கர்ணன் திரைப்படம் சிக்கி உள்ளது.

    வசூல் பாதிக்கும்

    வசூல் பாதிக்கும்

    ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு மீண்டும் பணத்தை ரிட்டர்ன் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் திரையரங்குகள் தள்ளப்படும். எதிர்பார்த்த அளவுக்கு வர வேண்டிய கர்ணன் பட வசூல் பெரிதளவில் பாதிக்கும் நிலையும் உருவாகி உள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவால் மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு தைரியமாக வருவார்களா? என்கிற அச்சமும் எழுந்துள்ளது.

    Recommended Video

    தமிழில் நிறைய படம் பண்ணனும் |Actress Rajisha Vijayan Talk Part-2| Filmibeat Tamil
    கர்ணன் வருவானா?

    கர்ணன் வருவானா?

    தமிழக அரசு திடீரென 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கலைப்புலி எஸ். தாணு திட்டமிட்டப்படி கர்ணன் திரைப்படத்தை நாளை வெளியிடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்று தான் தெரிகிறது. படக்குழு ஏதாவது திடீர் மாற்றம் அல்லது அறிவிப்பு வெளியிடுகிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

    English summary
    Tamil Nadu Government announced theaters will run only with 50 percent seat occupancies rule will affect Karnan box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X