»   »  அந்த 3 பேரையும் செட்டிலாக்கிவிட்டால் நான் நிம்மதியா கண்மூடுவேன்: நடிகை நந்தினி

அந்த 3 பேரையும் செட்டிலாக்கிவிட்டால் நான் நிம்மதியா கண்மூடுவேன்: நடிகை நந்தினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் கடமைகளை முடித்துவிட்டால் நான் நிம்மதியா கண் மூடுவேன் என்று நடிகை நந்தினி தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு நந்தினியின் தந்தையே காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.

நந்தினி மற்றும் அவரது தந்தை மீது கார்த்திக்கின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நந்தினி, அவரின் தந்தை தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இது குறித்து நந்தினி கூறுகையில்,

முன்ஜாமீன்

முன்ஜாமீன்

இந்த வழக்கில் முன்ஜாமீன் தேவையில்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டதால் மேல்முறையீடு எதுவும் செய்யப் போவது இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை.

தலைமறைவு

தலைமறைவு

நான் தலைமறைவாக மாட்டேன். தப்பு செய்தால் தானே பயப்பட வேண்டும். நான் ஒரு தப்பும் செய்யவில்லை. இங்கு தான் இருப்பேன். எங்கும் ஓடிவிட மாட்டேன்.

மரணம்

மரணம்

கார்த்திக் இறந்த கையோடு நானும் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு சில கடமைகள் உள்ளது. என்னை நம்பி 3 பிள்ளைகள் உள்ளன.

கடமை

கடமை

என் பெற்றோர், சகோதரரை தான் பிள்ளைகள் என்றேன். அவர்களுக்கு ஒரு வழிகாட்டிவிட்டால் நான் நிம்மதியாக கண் மூடுவேன். அது வரை கடவுள் என்னை அழைக்காமல் இருக்க வேண்டும் என்றார் நந்தினி.

English summary
Actress Nandhini said that she will die peacefully after fulfilling some duties. Nandhini's husband Karthik committed suicide by consuming poison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil