twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனியார் ஆப்களுக்கு ஆப்பு வைத்த தில் ராஜு... தளபதி 66 க்கு என்ன செய்ய போகிறார்?

    |

    ஐதராபாத் : பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு, பல தனியார் ஆப்களுக்கு பலத்த ஆப்பு வைத்துள்ளார். இதனால் அடுத்து அவர் தயாரிக்க போகும் விஜய்யின் தளபதி 66 படத்தில் என்ன செய்ய போகிறாரோ என பலரும் அலறிக் கொண்டிருக்கின்றனர்.

    பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு, பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் பேனரில் பல படங்களை தயாரிப்பதோடு சேர்த்து பல படங்களை விநியோகமும் இவர் செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் இவர் விநியோகம் செய்த படம் தான் பவன் கல்யாண் நடித்த பீம்லா நாயக். தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    எப்பவுமே நம்பர் ஒன் நான் தான்.. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா.. இத்தனை கோடியா?எப்பவுமே நம்பர் ஒன் நான் தான்.. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா.. இத்தனை கோடியா?

    தில் ராஜு வைத்த ஆப்பு

    தில் ராஜு வைத்த ஆப்பு

    இந்த படத்தில் புதிய விஷயம் ஒன்றை தில்லாக முயற்சி செய்தார் தில் ராஜு. அதாவது இந்த படத்திற்கு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால் தியேட்டருக்கே நேரில் வந்த தான் புக் செய்ய வேண்டும். புக் மை ஷோ போன்ற தனியார் ஆப்களுக்கு டிக்கெட் விற்பனை உரிமத்தை இவர் வழங்கவில்லை. தனியார் ஆப்கள் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது மக்கள் கூடுதலாக ரூ.30 வரை செலுத்த வேண்டி இருந்தது.

    அட நல்ல விஷயமா இருக்கே

    அட நல்ல விஷயமா இருக்கே

    இதை தடுப்பதற்காக தான் தில் ராஜு இந்த புதிய முறையை அறிமுகம் செய்தார். இதனை மக்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். ஆனால் தில் ராஜுவின் இந்த செயலால் தங்களின் பிழைப்பு போய் விட்டதே என தனியார் ஆப் நடத்துவோர் புலம்பி வந்தனர். பிறகு இது பற்றி தில் ராஜுவிடம் பேசி, டிக்கெட் விற்பனை பெற்றனர். ரூ.30 என்பதை ரூ.18 ஆக குறைப்பதாக வாக்குறுதி அளித்து தான் தில் ராஜுவிடம் இருந்து உரிமத்தை பெற்றுள்ளனர்.

    தளபதி 66 க்கு என்ன செய்வார்

    தளபதி 66 க்கு என்ன செய்வார்

    இந்நிலையில் தில் ராஜு தற்போது விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தை தயாரிக்க போகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பான் இந்தியன் படமாக, பெரிய பட்ஜடெ்டில் இந்த படத்தை உருவாக்க போகிறார்கள். எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் தளபதி 66 படத்திற்கு தில் ராஜு என்னவெல்லாம் செய்ய போகிறாரோ என பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

    பிழைப்பே போய் விடுமே

    பிழைப்பே போய் விடுமே

    தெலுங்கு படத்திற்கு தில் ராஜு செய்ததை கேட்டு கோலிவுட்டிலும் பலர் ஆடிப் போய் உள்ளனர். இவர் தமிழிலும் தடம் பதித்தால் பலரின் வேலையை காலி செய்து விடுவார் போலவே என புலம்பி வருகிறார்கள். கொரோனா, லாக்டவுனால் பாதிக்கப்பட்ட தியேட்டர் மற்றும் அது சார்ந்த தொழில்களும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். இதில் தில் ராஜு புதுமை என்ற பெயரில் ஏதாவது செய்து வைத்தால், என்ன செய்வது என இப்போதே யோசிக்க துவங்கி விட்டனர்.

    English summary
    In Bheemla nayak movie, Dil Raju didn't give ticket booking rights to private apps. The ticket booking apps are collects Rs.30 extra charge per ticket. But Dil Raju stopped this. Now he producing Vijay's Thalapathy 66. So kollywood is in shock because of dil raju.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X