twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : கதை திருட்டு.. கற்பனையில் கதையை வளர்க்கும் இயக்குனர்கள் இங்கு மிகக்குறைவு: ரவிஅரசு!

    ஜி.வி.பிரகாஷ் நடித்த ஐங்கரன் படம் இந்தாண்டிற்குள் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிஅரசு.

    |

    சென்னை: கற்பனையில் கதையை வளர்க்கும் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் குறைவு. அதனாலேயே கதை திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிஅரசு.

    அதர்வாவை வைத்து ஈட்டி படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் ரவிஅரசு. தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், ஐங்கரன் பட அப்டேட்ஸ், கதை திருட்டு விவகாரம், தனது அடுத்த படம் என பல்வேறு விசயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ரவிஅரசு.

    ஐங்கரன்:

    ஐங்கரன்:

    ஐங்கரன் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    முதன்முறையாக ஆக்சன்:

    முதன்முறையாக ஆக்சன்:

    ஜி.வி.பிரகாஷின் இமேஜை மாற்றக்கூடிய படமாக ஐங்கரன் இருக்கும். இந்த படத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷுக்கு முதல் முறையாக ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும்.

    இது தான் மெசேஜ்:

    இது தான் மெசேஜ்:

    இந்த படத்தை பொறுத்தவரை பொறியியல் மாணவர்களுக்கான படமாக இருக்கும். மாணவர்கள் படித்துவிட்டு நமது ஊரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்பது தான் படத்தின் மெசேஜ். நம்ம அறிவு நம்ம ஊருக்கு உதவணும்ங்கிற கான்செப்ட் தான் படம்.

    கதைக்களம்:

    கதைக்களம்:

    என்னுடைய படத்தைப் பொறுத்தவரை கதைக்களம் என்பது தமிழ் மட்டுல்லாமல் வேறு மொழிகளுக்கும் பொருந்த வேண்டும் என நினைப்பேன். அதனால் தொழில்நுட்ப ரீதியாக படம் தரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். படம் ஸ்டைலாக இருந்தால் தான் எனக்கு பிடிக்கும்.

    கட்டாயம்:

    கட்டாயம்:

    இப்போதைய தமிழ் சினிமா சூழலில் நம்முடைய கதையை வெளியில் சொல்லவே பயமாக இருக்கிறது. நண்பர்களிடம் கூட கதை சொல்ல தயக்கமாக இருக்கிறது. நமது கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைப்பது மிகவும் அவசியமானது. எனது எல்லா கதைகளையும் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

    ஆரோக்கியமான நடவடிக்கை:

    ஆரோக்கியமான நடவடிக்கை:

    சர்கார் விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கை ஆரோக்கியமாக இருக்கிறது. இதில் உண்மையாக என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு உதவி இயக்குனருக்காக நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்கது.

    கதை திருட்டுக்கு காரணம்:

    கதை திருட்டுக்கு காரணம்:

    கதை திருட்டு விவகாரத்தை பொறுத்த வரை உண்மையாக சொல்ல வேண்டுமானால் இங்கு நிறைய பேரிடம் கதையே இல்லை. ஒரு குரூப் இயக்குனர்கள் உலக சினிமாவை பார்த்து இன்ஸ்பெயராகி படம் பண்ண நினைக்கிறார்கள். வேறு சிலர் நாவல்கள், இலக்கியங்களை தழுவி படம் எடுக்கிறார்கள். கற்பனை திறனில் கதையை வளர்க்கும் இயக்குனர்கள் இங்கு மிகக்குறைவு. இது தான் கதை திருட்டுக்கு காரணம்.

    மாஸ் கமர்சியல் சினிமா:

    மாஸ் கமர்சியல் சினிமா:

    பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களை மக்கள் அங்கீகரித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் என்னை பொறுத்த வரை அது போன்ற யதார்த்தமான படங்கள் பண்ணும் எண்ணம் எனக்கு இல்லை. நல்ல மெசேஜுடன் ஒரு மாஸ் கமர்சியல் சினிமா எடுப்பது தான் எனக்கு பிடிக்கும். ரொம்ப கமர்சியலாகவும் இல்லாமல், மிக யதார்த்தமாகவும் இல்லாமல், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களை தான் நான் எடுப்பேன்.

    விஜய் சேதுபதி:

    விஜய் சேதுபதி:

    விஜய் சேதுபதி எனது நீண்ட கால நண்பர் தான். அடுத்து அவரை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஐங்கரன் வெளியான பிறகு அந்த ஆசை நிறைவேறும் என நினைக்கிறேன்" என இவ்வாறு இயக்குனர் ரவிஅரசு கூறினார்.

    English summary
    While talking to Oneindia, director Raviarasu said that the he will be directing Vijay Sethupathi soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X