»   »  மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன்: 'குரு' பட லைட்மேன்

மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன்: 'குரு' பட லைட்மேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் மணிரத்னத்தின் வீட்டின் முன்பு தற்கொலை செய்வேன் என லைட்மேன் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் குரு. அந்த படத்தில் லைட்மேனாக வேலை செய்தவர் மணிமாறன்.

Will end my life in front of Mani Ratnam’s house: Lightman

குரு படத்தில் வேலை செய்தபோது ரத்தம் தொடர்பான தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார் மணிமாறன். மருத்துவ செலவுக்கு பணம் கேட்டும் லைட்மேன்கள் சங்கத்திடம் இருந்தோ, மணிரத்னம் குழுவிடம் இருந்தோ பதிலே இல்லையாம்.

இது தொடர்பாக அவர் லைட்மேன்கள் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் பயனில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அவரது குடும்பத்தார் தான் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில் குரு படத்தில் வேலை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுக்கான பணத்தை அளிக்காவிட்டால் மணிரத்னம் வீட்டின் முன்பு தற்கொலை செய்யப் போவதாக மணிமாறன் தெரிவித்துள்ளார்.

மணிமாறனின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
A lightman named Manimaran who worked in Maniratnam's Guru said that he will commit suicide infront of the director's house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil