For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேசப்படும் படமாக வருமா ஜென்டில்மேன்-2? ...

  |

  ஜென்டில்மேன் படம் 1993 ஆம் ஆண்டு வந்தபோது அது ஷங்கர், அர்ஜுன் போன்றோருக்கு ரீ.என்ட்ரியாக இருந்தது. படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் பேசப்பட்டது. தற்போது ஜென்டில்மேன்-2 படம் எடுக்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ள நிலையில் முதல் படம் போல் இதுவும் பேசப்படும் படமாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

   ஒற்றை ரோஜா உடன் கடற்கரையில் காத்திருக்கும் லாஸ்லியா! ஒற்றை ரோஜா உடன் கடற்கரையில் காத்திருக்கும் லாஸ்லியா!

  ராபின் ஹூட் ரக படங்கள்

  ராபின் ஹூட் ரக படங்கள்

  தமிழ் திரையுலகில் ராபின் ஹூட் பாணி கதைகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. ஏன் உலகம் முழுவதும் இப்படிப்பட்ட கதைகளுக்கு மவுசு உண்டு. முதல் காரணம் மக்களின் இயலாமை, எதுவும் செய்ய முடியாத கோபம். அதை ஒரு சாகச வீரன் செய்கிறான், அதுவும் பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறான் எனும்போது அவனை தெய்வத்துக்கு நிகராக வைத்து பார்ப்பார்கள். ராபின் ஹூட் கதை ஒன்றும் தமிழக படங்களில் புதிதல்ல.

  எந்த காலத்திலும் ஜெயிக்கும் திரைக்கதை

  எந்த காலத்திலும் ஜெயிக்கும் திரைக்கதை

  அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழும் ராபின் ஹூட் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் பல ஹீரோக்கள் நடித்துள்ளனர். குரு படத்தில் கமல்ஹாசன் பெரிய இடங்களில் கொள்ளை அடித்து அனாதை விடுதி நடத்துவார். அதேபோல் கண்ணதாசனின் கருப்புப்பணம் படத்தில் பணக்காரர்களிடம் திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வகையில் கதை இருக்கும், எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்திலும் திருடன் எம்ஜிஆர் திருடி நாகேஷிடம் கொடுத்து ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்வார். இதே டைப்பில் வந்த படம் தான் ஜென்டில்மேன்.

  ஜென்டில்மேன் வசூலை வாரிக்குவித்த படம்

  ஜென்டில்மேன் வசூலை வாரிக்குவித்த படம்

  இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் ஓக்கே சொல்ல இயக்குநர் ஷங்கர் அதை எடுத்துக்கொண்டு முன்னணி கதாநாயகர்களை அணுக, கதையில் வரும் கேரக்டர், கதை பின்னனி சிக்கலான ஒன்றாக இருந்ததால் பலரும் மறுக்க அந்த நேரம் சங்கர் குருவுக்கு பிறகு பெரிதாக தமிழில் படம் இல்லாமல் இருந்த அர்ஜுன் ஒப்புக்கொள்ள படம் வெளியானது. இசை ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அது 3 வது படம். கற்ற வித்தை அத்தனையும் இறக்கியிருப்பார்.

  ஏறுமுகம் தந்த ஜென்டில்மேன்

  ஏறுமுகம் தந்த ஜென்டில்மேன்

  படத்தின் மையக்கரு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒன்றாக உள்ளது, குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது என அப்போது விமர்சனம் எழுந்தது. ஆனால் சினிமா அல்லவா? பாடல்கள், கவுண்டமணி- செந்தில் காமடி, மேலோட்டமாக பார்த்தால் குற்றம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான ராபின் ஹுட் பட ஸ்டைல் கதை, அர்ஜுனின் அதிரடி நடிப்பு படம் ஹிட்டானது. இதையடுத்து கே.டி.குஞ்சுமோன் தனது பட தயாரிப்பு கம்பெனி பெயரை ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் என மாற்றினார்.

  விஜய்-யை வைத்து 2 படம் தயாரித்தும் ஒன்றுமில்லாமல் போன குஞ்சுமோன்

  விஜய்-யை வைத்து 2 படம் தயாரித்தும் ஒன்றுமில்லாமல் போன குஞ்சுமோன்

  ஜென் டில்மேனுக்கு பிறகு காதலன் தயாரிக்க அதுவும் நன்றாக ஓடியது. பின்னர் நாகார்ஜுனா-சுஷ்மிதா சென்னை வைத்து தயாரித்த ரட்சகன் படமும் சரியாக போகவில்லை, அதன் பின் இறங்குமுகத்தைச் சந்தித்தார் கேடி.குஞ்சுமோன். விஜய்யை வைத்து"நிலாவே வா..", "என்றென்றும் காதல்.." என்கிற 2 படங்களை தயாரித்தார். அவைகள் சரியாக போகவில்லை. பின்னர் தனது மகனை வைத்து கோடீஸ்வரன் என்கிற படத்தை எடுக்க முயற்சித்து முழுமையடையாமலே போனது. அதன்பின்னர் கே.டி.குஞ்சுமோன் காணாமல் போனார்.

  முதல் படம் போல் இருக்குமா, ஜென்டில்மேன்-2?

  முதல் படம் போல் இருக்குமா, ஜென்டில்மேன்-2?

  தற்போது ஜென்டில்மேன்-2 படம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். படத்தை அறிவிக்கும்போதே இசையமைப்பாளர் யார் என சொன்னால் தங்கக்காசு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குஞ்சுமோன். இசையமைப்பாளராக பாஹுபலி இசையமைப்பாளர் கீரவாணியை புக் செய்ததன் மூலம் தான் பிரம்மாண்ட தயாரிப்பாளர்தான் என மீண்டும் பதிவு செய்துள்ளார். இனி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் அறிவிப்புக்கு பிறகே படம் குறித்த ஆர்வம் மக்களிடம் உருவாகும்.

  ஜென்டில்மேன்-2 இரண்டாவது இன்னிங்சாக இருக்குமா?

  ஜென்டில்மேன்-2 இரண்டாவது இன்னிங்சாக இருக்குமா?

  ஜென்டில்மேன்-2 படம் முதல் படம் போல் பிரம்மாண்டமாக, பாடல், கதை வசனம், ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் தேர்வு என பிரம்மாண்டமாக இருக்குமா? அல்லது அடுத்தடுத்து எடுத்த படங்கள் போல் இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். ஜென்டில்மேன் ப்டம் போல் மீண்டும் ஜென்டில்மேன்-2 தனக்கு இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிவைக்கும் என குஞ்சுமோன் நம்புகிறார். முதல் படம் போல் ஜென்டில்மேன்-2 படமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். நம்பிக்கைத்தான் வாழ்க்கை. பார்ப்போம்.

  English summary
  Will Gentleman-2 become a hit movie? ...
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X