»   »  தலைவர் வீட்டிற்கு முன்பு தீக்குளிப்போம்: கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்

தலைவர் வீட்டிற்கு முன்பு தீக்குளிப்போம்: கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் வீட்டிற்கு முன்பு தீக்குளிக்கப் போவதாக அவரது ரசிகர்கள் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

2007ம் ஆண்டுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தான் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர் இன்று முதல் 19ம் தேதி வரை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அவரை சந்திக்க ரசிகர்களுக்கு பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 அடையாள அட்டை

அடையாள அட்டை

சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ரஜினியை சந்திப்பதற்காக அடையாள அட்டைகள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவித்தனர்.

தீக்குளிப்பு

தீக்குளிப்பு

உண்மையான ரசிகர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ரஜினி தலையிட்டு சரி செய்யவில்லை என்றால் அவர் வீட்டிற்கு முன்பு தீக்குளிப்போம் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள் தெரிவித்தனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினிகாந்த் இன்று கரூர், குமரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ரசிகர்களை சந்தித்து வருகிறார். மாவட்டத்திற்கு 200 பேர் வீதம் இன்று மட்டும் 600 பேருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

 அரசியல்

அரசியல்

ரஜினி அரசியலுக்கு வர மாட்டாரா என்று அவரின் ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இந்நிலையில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்பதை அவர் இன்று சூசமாக தெரிவித்துள்ளார்.

English summary
Salem Rajini fans threatened to immolate themselves in front of their Thalaivar's house if he fails to solve the irregularities in ID card distribution.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil