பிக் பாஸ் அல்டிமேட்டில் முதல் ஆளாக வெளியேறப் போவது இவர் தானா? டேஞ்சர் ஜோனில் யாரெல்லாம்?

சென்னை: 24 மணி நேரம் ஸ்பேஸ் கிடைத்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் பிக் பாஸ் போட்டியாளர்கள் திணறி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5ஐ விட இது பெட்டரா இருக்கே என ரசிகர்கள் ஃபீல் செய்தாலும் மனம் கவர்ந்த போட்டியாளர் இவர் தான் என்றும் இன்னமும் ரசிகர்கள் எந்தவொரு போட்டியாளரையும் குறிப்பிட்டு அதிக அளவு ஆதரவை தருவதாக தெரியவில்லை.

நாமினேஷனில் இந்த வாரம் சிக்கியுள்ள 8 போட்டியாளர்களில் டேஞ்சர் ஜோனில் இருக்கும் அந்த மூவர் யார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

டாப்பில் நிரூப்

டாப்பில் நிரூப்

பிக் பாஸ் சீசன் 5ல் இறுதி சுற்று வரை போராடி வந்த நிரூப் இந்த முறை நாமினேட் ஆன 8 போட்டியாளர்களில் அதிக பட்சமாக 26% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து இதே போல நிரூப் நாமினேட் ஆகி ஓட்டுக்கள் அதிகரித்தால் ஃபைனல்ஸ் எளிதாக சென்று விடுவார் என்பது கன்ஃபார்ம்.

அனிதா முதல் அபிநய் வரை

அனிதா முதல் அபிநய் வரை

நிரூப்பை தொடர்ந்து அதிக வாக்குகளுடன் அனிதா சம்பத் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் சுருதி உள்ளார். நான்காம் இடத்தில் சினேகனும் ஐந்தாவது இடத்தில் அபிநய்யும் சேஃப் ஜோனில் உள்ளனர். ஆனால், அபிநய்க்கும் டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் சிறிய இடைவெளி மட்டும் தான் உள்ளது என்பதால் வரும் நாட்களில் ஓட்டுக்கள் எப்படி மாறும் என்பது தெரியவில்லை.

டேஞ்சர் ஜோனில் மூவர்

டேஞ்சர் ஜோனில் மூவர்

ஆரம்பத்திலேயே புரமோவெல்லாம் போட்டு அதகளப்படுத்திய மூவர் தான் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி 8.27% வாக்குகளுடன் உள்ளார். வனிதா விஜயகுமார் 7.51% வாக்குகளுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளார். கடைசி இடத்தில் ஜூலி 6.82% வாக்குகளுடன் அடிமட்டத்தில் உள்ளார்.

Recommended Video

Bigg Boss ultimate Day 2: காதல் கதையை Bigg Bossல் சொல்லிய Niroop abhirami | Abhi Niroop Love Story
ஜூலி எலிமினேட் ஆவாரா?

ஜூலி எலிமினேட் ஆவாரா?

வெறும் 6% வாக்குகளுடன் அன் அஃபிஷியல் போலிங்கில் கடைசி இடத்தில் உள்ளார் ஜூலி. தாடி பாலாஜி நாமினேஷனுக்கு வராமல் தப்பித்துக் கொண்டார். அபிநய்க்கு கூட 5வது சீசன் ஃபாலோயர்கள் சிலர் ஓட்டுப் போட்டு வருகின்றனர். ஜூலி மீது முதல் சீசனில் இருந்த அதே வெறுப்பு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் தொடர்கிறது. இந்நிலையில், முதல் வாரம் எலிமினேட் நடந்தால் ஜூலி எலிமினேட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என சொல்லிடுவாரா? கமல் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X