»   »  கபாலி படத்தில் ரஜினிக்கு டூயட் இருக்கா?

கபாலி படத்தில் ரஜினிக்கு டூயட் இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் மகள் வயதுடைய சோனாக்ஷி கூட டூயட் பாடணும்னு நெனைச்சப்பவே எனக்கு வேர்த்து கொட்டிருச்சு... அபூர்வ ராகங்கள் படம் நடிக்கிறப்ப கூட டென்சன் இருந்தது இல்லை. கடவுள் நடிகர்களுக்கு தண்டனை ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சா 60 வயசுக்கு மேல டூயட் பாடுற தண்டனையைக் கொடுக்கலாம் அப்படித்தான் இதைப் பார்க்கறேன் என்று லிங்கா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிக்கே தான் இனி டூயட் பாடி நடிக்க வேண்டுமா? என்ற யோசனை வந்துவிட்டது போல அதனால்தான் லிங்கா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனது மனதில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.


அபூர்வராகங்கள் தொடங்கிய ரஜினியின் திரை உலக பயணம் 159வது படமான கபாலி வரை தொடர்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படமாக அமைந்ததில்லை. சில படங்கள் தோல்வி கண்டிருக்கின்றன.


ரஜினி படம் ரிலீஸ் ஆன நேரங்களில் முதல்நாள் முதல்காட்சி பார்த்த ரசிகர்கள் கூட இன்றைக்கு ரஜினிகாந்த் இனியும் டூயட் பாடவேண்டுமா என்று யோசிக்கின்றனர்.


ரஜினியின் டூயட்

ரஜினியின் டூயட்

95க்கு மேல் ரஜினி நடித்த படையப்பா படத்தில் சௌந்தர்யா உடன் ரஜினி ஆடிய டூயட் பாடல் கூட ரசிக்கும்படியாகவே இருந்தது. அதே நேரத்தில் சிவாஜி படத்தில் சில டூயட் பாடல்கள் ரசிக்க முடியாமல் போய்விட்டது.
ரஜினி - ஐஸ்வர்யா ராய்

ரஜினி - ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படத்தில் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பாடிய கிளிமாஞ்சாரோ டூயட் பாடல் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைத்தது.


இதுக்கு மேல முடியல…

இதுக்கு மேல முடியல…

லிங்கா படத்தில் அனுஷ்கா உடன் ஆடிய டூயட் பாடலைக் கூட ஓரளவிற்கு மக்கள் ஒத்துக்கொண்டனர். ஆனால் சோனாக்ஷியுடனான ரஜினியின் டூயட்டைத்தான் பெரும்பாலானவர்களின் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவே இந்தப்படத்தின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்பது சினிமா ரசிகர்களின் கருத்து.
கபாலியில் டூயட்

கபாலியில் டூயட்

ரஜினியின் 159வது படம் கபாலி என்று செய்தி வெளியாகிவிட்டது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது முந்தைய படங்களான அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்களில் நாயகன், நாயகி டூயட் பாடல் காட்சிகள் இடம்பெற்றதில்லை. கபாலியில் ரஜினிக்கு டூயட் பாடல் காட்சி வைப்பாரா என்பது தெரியவில்லை.


டூயட் தவறில்லை

டூயட் தவறில்லை

கபாலியில் ரஜினி டூயட் பாடலாமா என்று அவரது ரசிகர்கள் சிலரிடம் கேட்டதற்கு, ஏன் கூடாது? ரஜினி எந்த வயதில் டூயட் பாடினாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளனர். பறந்து பறந்து சண்டை போட்டாலும் விசிலடித்து பார்ப்போம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


ஐயோ வேண்டாமே!

ஐயோ வேண்டாமே!

ரஜினிகாந்த் இனியும் டூயட் நடனம் ஆடாமல் நடிக்கலாம் என்று பெரும்பாலான சினிமா ரசிகர்கள் கூறியுள்ளனர். லிங்கா சொதப்பியதற்கு காரணமே சோனாக்ஷியுடன் ரஜினி ஆடிய டூயட்தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் சினிமா ரசிகர்கள்.
English summary
Rajnikanth's new movie Kabali has created many buzz among the film goers and one among them is will Rajini have a duet with the heroine?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil