ஓப்பனாக அந்த ஆசையை சொல்லி சவால் விட்ட நிரூப்... என்ன செய்ய போகிறார் நம்மவர் ?

சென்னை : பிக்பாஸில் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் முதல் ஆளாக நிரூப் வெளியேற்றப்பட்டார். ஃபினாலே டிக்கெட்டை பெற தகுதியில்லாதவர் என கேட்கப்பட்ட கேள்விக்கு 5 பேர் நிரூப்பிற்கு ஓட்டுப் போட்டதால், அவர் வெளியேற்றப்பட்டார்.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!

ஆனால் இதை நிரூப்பால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் அதை கோபமாக வெளிப்படுத்தாமல், ஒவ்வொருவரும் செய்யும் தவறையும் சுட்டிக் காட்டி, தன்னை வெளியேற்றியது ஏன் என கேள்வி கேட்டு வந்தார். தனது வருத்தம் மற்றும் ஏக்கத்தையும் அடிக்கடியாக தனியாக உட்கார்ந்தும், ஃபினாலே டிக்கெட்டை ஏக்கமாக பார்த்தும் வெளிப்படுத்தினார் நிரூப்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இந்நிலையில் முட்டை டாஸ்க் நடத்தப்படுவதற்கு முன், முதல் டாஸ்கிலேயே தான் வெளியேற்றப்பட்ட அன்று இரவு தாமரையிடம் பேசும் நிரூப், தனது ஆசையை வெளிப்படையாக சொல்லி சவாலும் விடுகிறார். இதனால் இன்றைய சனிக்கிழமை எபிசோடில் என்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

 நிரூப்பின் ஆசை

நிரூப்பின் ஆசை

நிரூப், தாமரையிடம் கூறும் போது, நீ எப்படியும் ஃபைனலுக்கு போய் விடுவாய். அது எனக்கு தெரியும். இருந்தாலும் இந்த டிக்கெட்டை வென்று நீ ஃபைனலுக்கு செல்ல வேண்டும். நானும் ஃபைனலுக்கு வந்து விடுவேன். மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஃபைனலில் கமல் சார் நடுவில் நின்று ஒரு புறம் நீயும், மறுபுறம் நானும் நிற்க வேண்டும். அப்போது கமல் சார் உன் கையை உயர்த்தி வின்னர் என சொல்ல வேண்டும். இது தான் என் ஆசை என்கிறார்.

பேரை மாற்றிக் கொள்கிறேன்

பேரை மாற்றிக் கொள்கிறேன்

தொடர்ந்து பேசிய நிரூப், இந்த வாரம் நான் வெளியே போய் விடுவேன் என அனைவரும் நினைக்கிறார்கள். அதற்காக தானே அனைவரும் சேர்ந்து என்னை வெளியேற்றினார்கள். ஆனால் வேண்டுமானால் பார், சனிக்கிழமை அன்று முதல் ஆளாக கமல் சார் என் பேரை சொல்லி காப்பாற்றுவார். அப்படி நடக்கவில்லை என்றால் நான் என்னை பெயரை மாற்றி வைத்துக் கொள்கிறேன் என சவாலும் விடுகிறார்.

கமல் என்ன பேச போகிறார்

கமல் என்ன பேச போகிறார்

எப்படியும் இந்த வாரம் முட்டை டாஸ்கின் போது நடந்த பிரியங்கா - தாமரை, ராஜு - பாவனி சண்டை பற்றி கமல் நிச்சயம் கேள்வி கேட்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் நடத்தப்பட்ட முதல் டாஸ்க், முட்டை டாஸ்க் ஆகியன நேர்மையாக நடத்தப்படவில்லை, அனைவரும் பேசி வைத்து விளையாடினார்கள், குறிவைத்தே நிரூப், தாமரை, பாவனி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர் என பலவிதமாக குற்றச்சாட்டுக்கள் சோஷியல் மீடியாக்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

முதலில் யார் காப்பாற்றப்பட போவது

முதலில் யார் காப்பாற்றப்பட போவது

இதே போல் ராஜு, வேறு ஒருவருக்காக விட்டுக் கொடுத்ததாக சொன்னது, சிபி விளையாடவேயில்லை என்பது போன்றவையும் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கமல் இன்று என்ன பேச போகிறார் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், நிரூப் சவால் விட்டபடி கமல் இன்று நிரூப்பை முதல் ஆளாக காப்பாற்றுவாரா என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X