2, 3 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொன்ன மருத்துவர்கள்.. பிக் பாஸில் இந்த வாரம் கமல் பங்கேற்பாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 7 வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், அவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

கமல்ஹாசன் இரண்டு, மூன்று தினங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் 7வது வாரம்

பிக் பாஸ் 7வது வாரம்

விஜய் டிவியில் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 7வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் இருந்து இதுவரை 6 பேர் வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறியதால், இப்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் கமல்ஹாசன்

மருத்துவமனையில் கமல்ஹாசன்

ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த 6வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும் அவரை, இரண்டு, மூன்று தினங்களுக்கு ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹோஸ்ட் செய்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கமலுக்குப் பதில் யார்?

கமலுக்குப் பதில் யார்?

சிகிச்சையில் இருக்கும் கமல்ஹாசனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை எனில், அவருக்குப் பதிலாக யார் ஹோஸ்ட் செய்வார் என எதிர்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் ரம்யா கிருஷ்ணன் முதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமலுக்குப் பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்றால், போட்டியாளர்களின் குறைகளை சரியாக பாயிண்ட் பிடித்து பேசுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரம்யாகிருஷ்ணன் இல்லையென்றால் சிம்பு

ரம்யாகிருஷ்ணன் இல்லையென்றால் சிம்பு

ரம்யாகிருஷ்ணன் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதனால், அவர் ஷூட்டிங் பிஸியில் வரமுடியாமல் போனால், சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவும் ஏற்கனவே கமல்ஹாசனுக்குப் பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் நடக்கும்?

என்னதான் நடக்கும்?

பிக் பாஸ் வீட்டில் இந்தவாரம் நீதிமன்றம் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் யார் வெற்றி, தோல்வி என்ற முடிவோடு, போட்டியில் நடந்த தவறுகளும் பஞ்சாயத்துக்கு வரும். அதேபோல், இந்த வாரம் எவிக்சனும் ரொம்பவே முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ரேஸில் ராம், ராபர்ட் மாஸ்டர் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் தான் எவிக்சன் ஆவதற்கு அதிகம் வாய்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வாரமும் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வங்குவார் என சொல்லப்படுகிறது. சிகிச்சையை முடித்துவிட்டு எப்படியும் பிக் பாஸ் வீட்டுக்கு அவர் வருவார் என நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X