கார்த்தியின் அடுத்த பட டைரக்டர் இவரா...டைட்டில் கூட வச்சுட்டாங்களாமே

சென்னை : கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக ரிலீசிற்கு தயாராக உள்ளன. இதில் எந்த படம் முதலில் ரிலீசாக போகிறது என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என வரிசையாக பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சர்தார் தீபாவளி ரிலீஸ் என முதல் ஆளாக கன்ஃபார்ம் செய்து விட்டனர். இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக இணைந்த படம் கார்த்தியின் சர்தார் தான்.

இறுதிக்கட்டத்தில் சர்தார் ஷுட்டிங்

இறுதிக்கட்டத்தில் சர்தார் ஷுட்டிங்

கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கான ஷுட்டிங் இன்னும் 30 நாட்கள் மீதமுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கதை விவாத பணிகளை இறுதி செய்திருக்கும் படக்குழு, நடிகர்கள் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

அதில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் சம்பள விவகாரத்தில் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ராஜூமுருகன் - கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைத்திருக்கின்றனர்.

இரட்டை வேடத்தில் கார்த்தி

இரட்டை வேடத்தில் கார்த்தி

இரும்புத் திரை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள படம் என்பதால் சர்தார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சர்தார் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி இரட்டை வேடத்திலும், போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்பை கிளப்பும் ரோல்கள்

எதிர்பார்ப்பை கிளப்பும் ரோல்கள்

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான வந்தியத் தேவன் ரோலில் கார்த்தி நடித்துள்ளார். இதனால் அந்த படமும் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் அதிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விருமன் படத்தில் மொத்தமாக மாறுபட்ட கிராமத்து கெட்அப்பில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டரில் கார்த்தி கலக்கி வருவதால் அத்தனை படங்களுமே எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.

அடுத்த படம் கைதி 2 இல்லையா

அடுத்த படம் கைதி 2 இல்லையா

கார்த்தி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்தில் தான் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மித்ரன் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதோடு, இந்த படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைத்துள்ளதால் என்ன கதையாக இருக்கும் என ரசிகர்கள் யோசிக்க துவங்கி விட்டனர்.

கார்த்தி பட டைட்டில் இதுவா

கார்த்தி பட டைட்டில் இதுவா

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஏற்கனவே மெட்ராஸ் படத்தில் நடித்தார் கார்த்தி. இதே போல் கைதி படத்தில் அவரின் கேரக்டர் பெயர் தில்லி என வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஊர்/ நாட்டின் பெயரை டைட்டிலாக கொண்ட படத்தில் கார்த்தி நடிக்க போகிறார். அதுவும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X