»   »  கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இந்த பிஸினஸ் தான் பண்ணப் போறாங்களா?

கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இந்த பிஸினஸ் தான் பண்ணப் போறாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும் சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர்.

இருவரும் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் காதலிப்பதாகவே கூறப்படுகிறது. இருவரும் வெளிநாடுகளில் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி இருவரும் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் சில முக்கிய இடங்களில் நிலங்கள் வாங்கியுள்ளனர். அந்த இடங்களில் அவர்கள் இருவரும் இணைந்து ரெஸ்டாரன்ட் கட்ட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 Will Kohli and Anushka Sharma start this business?

ரெஸ்டாரன்ட் கட்டுவதற்கான பணிகளை இருவரும் துவக்கிவிட்டதாகவும், விரைவில் ரெஸ்டாரன்ட் திறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முன்னணி நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களைத் தொடங்கிவருகிறார்கள். அந்த வகையில் அனுஷ்கா சர்மாவும் முன்கூட்டியே இந்தத் திட்டத்தில் இறங்கியிருக்கலாம்.

English summary
Anushka Sharma and Virat Kohli have close for recent years. They are building a restaurant together in mumbai and delhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil