தியேட்டர்களில் கூட்டம் இல்லை.. ஓடிடியில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்? மீண்டும் பரபரப்பு!
சென்னை: மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக வந்த செய்தி, திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் நடித்து முடித்துள்ள படம், மாஸ்டர். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

லாக்டவுன் காரணமாக
இதில் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தியேட்டர்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

காட்சிகள் ரத்து
ஆனால், கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை இருக்கிறது. பல பகுதிகளில் தியேட்டர்களை மூடி வருகின்றனர். இந்நிலையில், ஓடிடியில் படங்களை சில தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தியேட்டரில் வெளியாகும்
இந்நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை மாஸ்டர் படக்குழு மறுத்து வருகிறது. அதோடு பொங்கல் பண்டிகைக்கு படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பரபரப்பு
இந்நிலையில், நெட்பிளிக்ஸில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக இப்போது மீண்டும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'நடிகர் விஜய், மாஸ்டர் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே விரும்புகிறார்.
Recommended Video

வெளியாக வாய்ப்பில்லை
அதனால், ஓடிடியில் இந்தப் படம் வெளியாக வாய்ப்பில்லை' என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்தப் படத்தை ரிலீஸ் செய்தால்தான், தியேட்டருக்கு ஓரளவு ரசிகர்கள் வருவார்கள் என்று தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் இப்போது நம்பி இருப்பது மாஸ்டர் படத்தைதான். அதனால் ஓடிடி ரிலீஸுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











